ரஷ்யாவை தாக்க ஏவுகணை குடுத்தா உங்களையும் தாக்குவோம்! - அமெரிக்காவை எச்சரித்த புதின்!

Prasanth Karthick
வெள்ளி, 22 நவம்பர் 2024 (09:29 IST)

உக்ரைன் - ரஷ்யா இடையே போர் தொடர்ந்து வரும் நிலையில் உக்ரைனுக்கு உதவி செய்யும் நாடுகளை தாக்குவோம் என ரஷ்ய அதிபர் புதின் மறைமுக எச்சரிக்கை விடுத்துள்ளார். 

 

 

ரஷ்யாவின் அண்டை நாடான உக்ரைன், நேட்டோ அமைப்பில் இணைய எடுத்த முடிவை எதிர்த்து ரஷ்யா உக்ரைன் மீது போரை தொடங்கியது. சுமார் 2 ஆண்டுகள் தாண்டியும் இந்த போர் தொடர்ந்து வரும் நிலையில் சமீபத்தில் உக்ரைனுக்கு ஆயுத உதவி வழங்கி வரும் அமெரிக்கா, தொலைதூர ஏவுகணைகளை பயன்படுத்த உக்ரைனுக்கு அனுமதி வழங்கியது.

 

இதனால் ரஷ்யாவின் முக்கிய நகரங்கள் உக்ரைனின் தாக்குதலுக்கு உள்ளாகும் அபாயம் ஏற்பட்டுள்ளது. இந்நிலையில் அமெரிக்கா அளித்து இந்த அனுமதி குறித்து மறைமுகமாக குறிப்பிட்டு பேசிய ரஷ்ய அதிபர் விளாடிமிர் புதின், ரஷ்யாவை தாக்க ஏவுகணைகள் வழங்கும் நாடுகள் மீது ஏவுகணை தாக்குதல் நடத்தப்படும் என அமெரிக்காவை எச்சரிக்கும் வகையில் பேசியுள்ளார். மேலும் இரு நாடுகளுக்கு இடையிலான போரை மேற்கத்திய நாடுகள் உலகப் போராக மாற்ற முயற்சிப்பதாகவும் அவர் குற்றம் சாட்டியுள்ளார்.

 

Edit by Prasanth.K

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

நீதிபதி ஜி.ஆர். சுவாமிநாதன் தாமாகவே பதவி விலக வேண்டும்.. திருமாவளவன் வலியுறுத்தல்:

ஒரே மேடையில் 2 பெண்களுக்கு தாலி கட்டிய இளைஞர்: இருவருடனும் 10 வருடங்கள் வாழ்ந்து குழந்தை பெற்ற பின் திருமணம்..!

நிர்மலா சீதாராமன் 'டீப்ஃபேக்' வீடியோ: பெங்களூரு மூதாட்டியிடம் ரூ.33 லட்சம் மோசடி!

யூடியூப் வீடியோ பார்த்து அறுவை சிகிச்சை: உ.பி.யில் பெண் பலி.. போலி மருத்துவர் மீது வழக்கு

பாலியல் வன்கொடுமைக்கு பின் அந்தரங்க உறுப்பில் இரும்புக்கம்பி.. 7 வயது சிறுமிக்கு நேர்ந்த கொடூரம்..!

அடுத்த கட்டுரையில்
Show comments