ஆன்லைன் ஆப்ஸ் வாயிலாக பெருகி வரும் பாலியல் தொழில்: அதிர வைக்கும் ஆய்வு முடிவுகள்
ஆன்லைன் ஆப்ஸ் வாயிலாக பெருகி வரும் பாலியல் தொழில்: அதிர வைக்கும் ஆய்வு முடிவுகள்
விரல் நுனியில் தகவல்களை தரும் ஆப்ஸ் மற்றும் சமூக வலைத்தளங்களின் மூலம் தற்போது பாலியல் பாலியல் தொழில் செய்வது அதிகரித்து வருவதாக சமீபத்திய ஆய்வில் தெரிய வந்துள்ளது.
பாலியல் தொழில் செய்து சட்ட சிக்கலில் மாட்டிக் கொள்ளக் கூடாது என்பதற்காக பாலியல் தொழிலுக்கு சமூக வலைதளங்கள், ஆப்ஸ்கள் பயன்படுத்தப்படுகிறது என்று ஆய்வில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
இந்த தொழிலில் ஈடுபடுவோர் தங்களது விளம்பரங்களை இணையதளத்தின் உள் பக்கங்களில் மறைத்து வெளியிடுவதும் ஆய்வின் மூலம் தெரியவந்துள்ளது.
அமெரிக்கா போன்ற நாடுகளில் பாலியல் தொழிலுக்கு ஆப்ஸ்களை பயன்படுத்துகின்றனர். பாலியல் தொழில் நடக்கும் விவரங்களை தெரிந்து கொள்ள, குறிப்பிட்ட ஆப்களுக்கு சென்று, வாடிக்கையாளர் இருக்கும் முகவரியை டைப் செய்தால், பாலியல் தொழில் நடக்கும் இடத்தின் முகவரி கிடைக்கும் வகையில் ஆப்ஸ்கள் வடிவமைக்கப்பட்டுள்ளன.
பாலியல் தொழிலில் முகவர்களாக செயல்படுபவர்கள் விளம்பரங்கள் கொடுக்க அதிகளவில் இணையதளங்களை பயன்படுத்துவதாகவும், புதிய தொழில்நுட்பங்கள் இவர்களுக்கு உதவுவதாகவும் கருத்துக்கள் எழுந்துள்ளது.
பாலியல் தொழிலில் ஈடுபட்டு இருக்கும் பாலியல் முகவர்கள் ஆண்டுக்கு 75,000 டாலர்கள் முதல் 1,00,000 டாலர்கள் வரை சம்பாதிப்பதாக தெரிய வந்துள்ளது. 80 சதவீத பாலியல் தொழில் இணையதளம், சமூக வலைதளங்கள், ஆப்ஸ் வாயிலாக நடக்கிறது என்பது குறிப்பிடத்தக்கது.