Webdunia - Bharat's app for daily news and videos

Install App

ரூ.1 லட்சம் வீட்டுக்கு அனுப்பினால் ரூ.5000 பரிமாற்ற வரி.. டிரம்ப் அதிரடியால் இந்தியர்களுக்கு பாதிப்பு..!

Siva
வெள்ளி, 16 மே 2025 (09:38 IST)
அமெரிக்கா குடிமகன்கள் தவிர மற்றவர்கள் பணம் அனுப்பினால் 5% வரி விதிக்கப்படும் என அமெரிக்க அதிபர் ட்ரம்ப் அறிவித்திருப்பது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
 
அமெரிக்காவை சேராதவர்கள் அமெரிக்க குடிமகன்களாக இல்லாதவர்கள் அதாவது எச்1பி விசா மற்றும் கிரீன் கார்டு வைத்திருந்தாலும் கூட வெளிநாடுகளுக்கு பணம் அனுப்பும்போது 5% பரிமாற்ற வரியை செலுத்த வேண்டும் என்று அமெரிக்க அரசு அதிரடியாக அறிவித்துள்ளது.
 
இந்த அறிவிப்பு காரணமாக இந்தியாவுக்கு தான் பெரும் பாதிப்பு ஏற்படும் என்றும் இந்தியர்கள் தான் அதிக அளவில் அமெரிக்காவில் இருந்து பணம் அனுப்புவதாகவும் கூறப்படுகிறது.
 
அமெரிக்காவிலிருந்து இந்தியாவுக்கு ஆண்டுதோறும் 32 பில்லியன் அமெரிக்க டாலர் பணம் அனுப்பும் நிலையில் அமெரிக்காவில் உள்ள இந்தியர்களுக்கு இது பெரும் பாதிப்பு ஏற்படும்.
 
அதாவது அமெரிக்காவில் உள்ள ஒருவர் ஒரு லட்ச ரூபாய் இந்தியாவுக்கு தனது உறவினருக்கு அனுப்பினால் அதில் 5000 ரூபாய் பரிமாற்ற வரி செலுத்த வேண்டி வரும் என்பதும் 95 ஆயிரம் தான் சம்பந்தப்பட்டவருக்கு போய் சேரும் என்றும் கூறப்படுகிறது. இந்த வரி விதிப்பு காரணமாக இந்தியர்கள் உள்பட வெளிநாட்டினர் காட்டும் அதிர்ச்சி அடைந்துள்ளன

Edited by Siva

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

பிளஸ்-1 பொதுத்தேர்வில் 92.09 சதவீதம் பேர் தேர்ச்சி: மாணவியர்கள் தான் அதிகம்..!

10ஆம் வகுப்பு தேர்ச்சி விகிதம்.. பின்தங்கிய சென்னை மாவட்டம்.. 38ல் 34வது இடம்..!

தமிழகத்தில் வீசும் பவன் கல்யாண் காற்று! விஜய்க்கு போட்டியா?

பாமக மாவட்ட தலைவர்கள் கூட்டம்.. அன்புமணி உள்பட பலர் ஆப்செண்ட்?? - ராமதாஸ் விடுத்த எச்சரிக்கை!

2026 மட்டுமல்ல.. 2036ஆம் ஆண்டிலும் திமுக ஆட்சி தான்: முதல்வர் ஸ்டாலின் நம்பிக்கை..!

அடுத்த கட்டுரையில்
Show comments