Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

மக்கள் கூட்டமின்றி நடந்த இளவரசரின் இறுதி ஊர்வலம்! – அரசு குடும்பத்தினர் கண்ணீர்!

Advertiesment
மக்கள் கூட்டமின்றி நடந்த இளவரசரின் இறுதி ஊர்வலம்! – அரசு குடும்பத்தினர் கண்ணீர்!
, ஞாயிறு, 18 ஏப்ரல் 2021 (08:32 IST)
இங்கிலாந்து இளவரசர் சார்லஸ் இயற்கை எய்திய நிலையில் அவரது இறுதி ஊர்வலம் மக்கள் கூட்டமின்றி நடந்து முடிந்துள்ளது.

இங்கிலாந்து நாட்டின் இளவரசரும், இங்கிலாந்து ராணி இரண்டாம் எலிசபெத்தின் கணவருமான இளவரசர் பிலிப் வயது மூப்பு காரணமாக கடந்த 9ம் தேதி உயிரிழந்தார். அரச குடும்ப வழக்கப்படி அவரது மறைவுக்கு 8 நாள் துக்கம் அனுசரிக்கப்பட்ட நிலையில் அவரது உடல் வின்ஸ்டர் கோட்டையில் வைத்து அஞ்சலி செலுத்தப்பட்டது.

பொதுவாக அரச குடும்பத்தினர் இறந்து விட்டால் அவர்களுக்கு அஞ்சலி செலுத்த ஏராளமான மக்கள் வருவார்கள். ஆனால் இந்த முறை கொரோனா பாதிப்பு காரணமாக மக்கள் யாரும் அஞ்சலி செலுத்த அனுமதிக்கப்படவில்லை. அரச குடும்பத்தினர் 30 பேர் மட்டுமே இறுதி சடங்கில் கலந்து கொண்டனர். லண்டனில் மக்கள் கூட்டமின்றி நடந்த முதல் அரச குடும்பத்தின் இறுதி மரியாதை இது என்பது குறிப்பிடத்தக்கது.

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

பிரதமர் கோரிக்கை எதிரொலி: இன்றுடன் முடிவடைகிறதா கும்பமேளா?