குவாட் மாநாட்டில் பங்கேற்பதற்காக பிரதமர் மோடி அமெரிக்கா புறப்பட்டு சென்றார்.
இந்தியா, அமெரிக்கா, ஜப்பான் மற்றும் ஆஸ்திரேலியா நாடுகள் அங்கம் வகிக்கும் குவாட் அமைப்பின் மாநாடு, அமெரிக்காவின் வில்மிங்க்டன் நகரில் நடைபெறுகிறது. ஜோ பைடன் தலைமையில் நடக்கும் இம்மாநாட்டில் பங்கேற்க பிரதமர் மோடி அமெரிக்கா புறப்பட்டார்.
குவாட் அமைப்பு கடந்த ஆண்டு மேற்கொண்ட பணிகள் குறித்து, வரும் ஆண்டில் மேற்கொள்ள வேண்டிய பணிகள் குறித்தும் இந்த மாநாட்டில் ஆலோசிக்கப்படவுள்ளது. ரஷ்யா-உக்ரைன் போர் மற்றும் இந்தோ பசிபிக் பிராந்திய நிலவரங்கள் குறித்து 4 நாட்டு தலைவர்களும் விவாதிக்க இருக்கின்றனர்.
மேலும் இந்த பயணத்தின் போது அமெரிக்க முன்னாள் அதிபர் டிரம்ப்பையும், பிரதமர் மோடி சந்திக்க உள்ளதாக கூறப்படுகிறது. ஆனால் இந்திய வெளியுறவுத்துறை இந்த தகவலை உறுதி செய்யவில்லை. அதேவேளையில் மறுக்கவும் இல்லை.
குவாட் உச்சி மாநாட்டைத் தொடர்ந்து வரும் 23ஆம் தேதி ஐநா பொதுச்சபை கூட்டத்திலும் பிரதமர் நரேந்திர மோடி உரை நிகழ்த்த இருக்கிறார். அன்றைய தினம் பல்வேறு நாட்டு தலைவர்களையும் பிரதமர் நரேந்திர மோடி சந்தித்து பேச உள்ளார்.