350 பெண்களின் கற்பை சூறையாடிய ஆவிகள்? மதபோதகரின் அதிர்ச்சி வாக்குமூலம்

Webdunia
செவ்வாய், 18 டிசம்பர் 2018 (16:06 IST)
பிரேசில் நாட்டை சேர்ந்த 76 வயதான ஜோ டெய்சீரா ஃபரியா ஒரு மதபோதகர். இவர் நோய்களை (குறிப்பாக மன நோய்களை) குணப்படுத்துவதாக கூறி வைத்தியம் பார்ந்த்து வந்துள்ளார். 
 
எனவே, இவரிடம் சிகிச்சைக்கு ஆண்கள், பெண்கள் என அனைவரும் வந்துள்ளனர். சமீபத்தில் டச்சு புகைப்பட கலைஞர் ஒருவரும் சென்றுள்ளார். சிகிச்சைக்கு பின்னர் அவர், அந்த மதபோதகர் மனநோயாளிகளின் உணர்ச்சிகளை தூண்டிவிட்டு பாலியல் பலாத்காரம் செய்வதாக தனியார் தொலைக்காட்சிக்கு பேட்டி அளித்தார். 
 
இவரின் இந்த புகாருக்கு பின்னர் சுமார் 350 பெண்கள் மதபோதகர் தங்களை பலாத்காரம் செய்ததாக புகார் அளித்தனர். இதனால் அதிர்ச்சி அடைந்த போலீஸார் அந்த மதபோதகரை நேரில் ஆஜராகும்படி உத்தரவிட்டனர். 
 
போலீஸார் முன் ஆஜரான மதபோதர் அளித்த வாக்குமூலம் போலீஸாருக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. அதாவது, எனக்குள் 30 டாக்டர்களின் ஆவிகள் உள்ளது. அதனால்தான் என்னால் பிறருக்கு சிகிச்சை அளிக்க முடிகிறது. மேலும், பெண்களை பலாத்காரம் செய்தது நான் அல்ல என்னுள் இருக்கும் டாக்டர்களின் ஆவிகள் என தெரிவித்துள்ளார். 
 
இந்நிலையில் இந்த புகாரில் அடுத்தக்கட்ட நடவடிக்கை என்னவென்பது போலீஸாருக்கே தெரியாமல் குழப்பத்தில் உள்ளனர். 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

ஜெயிலுக்கு அனுப்புவேன் என ஆசிரியை மிரட்டல்.. பயத்தில் 9ஆம் வகுப்பு மாணவன் தற்கொலை..!

5 மேஜைகளா? 8 மேஜைகளா? உடற்கூராய்வில் ஏன் இந்த குழப்பம்: அண்ணாமலை கேள்வி

டாஸ்மாக் ஊழியர்களுக்கு தீபாவளி போனஸ் அறிவிப்பு.. எத்தனை சதவீதம்?

கரூர் வந்தது சிபிஐ விசாரணை குழு.. பாதிக்கப்பட்டோர் குடும்பங்களை நேரில் சந்திக்க திட்டம்..!

உண்மை வெளிவரும்.. நான் இருக்கேன் கலங்காதீங்க! - புஸ்ஸி ஆனந்த், நிர்வாகிகளை தேற்றிய விஜய்!

அடுத்த கட்டுரையில்