Webdunia - Bharat's app for daily news and videos

Install App

இஸ்ரேல் – பாலஸ்தீன பிரச்சினை: ஐடியா மணியாக களம் இறங்கிய ட்ரம்ப்!

Webdunia
புதன், 29 ஜனவரி 2020 (11:25 IST)
இஸ்ரேல் – பாலஸ்தீனம் இடையே பல ஆண்டு காலமாக தொடர்ந்து வரும் யுத்தத்தை நிறுத்த அமெரிக்க அதிபர் ட்ரம்ப் புதிய திட்டம் ஒன்றை முன்மொழிந்துள்ளார்.

இஸ்ரேல் – பாலஸ்தீனம் இடையே பல ஆண்டுகளாக தங்கள் சொந்த நாட்டுக்கான போர் நடந்து வருகிறது. முக்கியமாக யூதர்களுக்கும், பாலஸ்தீனியர்களுக்கும் பொது புனித தலமாக விளங்கும் ஜெருசலேம் மீது இரு தரப்பிலும் ஆதிக்கம் செலுத்த பெரும் யுத்தம் நடந்து வருகிறது. ஜெருசலேம் யாருக்கு என்பதே போரின் மையமாக உள்ளது.

இந்நிலையில் இந்த பிரச்சினைகளுக்கு முடிவுக்கட்ட அமெரிக்க அதிபர் ட்ரம்ப் புதிய யோசனை ஒன்றை கூறியுள்ளார். அதன்படி இஸ்ரேல் தங்களது குடியேற்றத்தை நான்கு ஆண்டுகளுக்கு நிறுத்தி வைக்க வேண்டும். மேலும் கிழக்கு ஜெருசலேமை தலைநகராக கொண்டு பாலஸ்தீனம் அமைக்கப்பட வேண்டும் என கூறியுள்ளார்.

ஆனால் அதிபர் ட்ரம்பின் இந்த திட்டம் இஸ்ரேலியர்களுக்கு நன்மையளிப்பதாக உள்ளதாக பாலஸ்தீனம் கருத்து தெரிவித்துள்ளது. ட்ரம்பின் கருத்துக்கு பாலஸ்தீன ஆதரவு நாடுகளும் எதிர்ப்பு தெரிவித்துள்ளன.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

வெயில் தாக்கம் எதிரொலி: 1-5 வகுப்புகளுக்கு முன்கூட்டியே முழு ஆண்டு தேர்வு..!

மியான்மரில் மீண்டும் நிலநடுக்கம்..! சாலைகள் இரண்டாக பிளந்ததால் மக்கள் அதிர்ச்சி..!

தோண்ட தோண்ட பிணங்கள்.. மியான்மரில் தொடரும் சோகம்! பலி எண்ணிக்கை 2 ஆயிரமாக உயர்வு!

நகராட்சிகளாக மாறிய 7 பேரூராட்சிகள்: தமிழக அரசு அரசாணை..!

ஏலச்சீட்டு நடத்தி மோசடி.. கணவருடன் கைதான முன்னாள் பாஜக பெண் நிர்வாகி..!

அடுத்த கட்டுரையில்
Show comments