அமெரிக்க வெளியுறவு மந்திரி வாட்டிகன் சுற்றுப்பயணம் செய்த போது அவரை சந்திக்க மறுத்துள்ளார் போப் ஆண்டவர்.
அமெரிக்காவில் இது தேர்தல் காலம். அதனால் அரசியல் பரபரப்புகளுக்கு பஞ்சம் இல்லை. இந்நிலையில் அமெரிக்க வெளியுறவுத்துறை அமைச்சரான மைக் பாம்பியோ சென்றுள்ள இத்தாலி பயணத்தில் வாடிகனுக்கு சென்ற போது போப் ஆண்டவரை சந்திக்க விரும்பியுள்ளார். ஆனால் அந்த சந்திப்புக்கு போப் மறுத்துள்ளார். தேர்தல் நேரத்தில் அவர் எந்த அரசியல் பிரமுகர்களையும் சந்திக்க மாட்டார் என்பதுதான் இதற்குக் காரணமாம்.