தமிழக முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவுக்கு இணையாக மேற்குவங்கத்தில் மக்கள் ஆதரவுடன் ஆட்சி செய்து வருபவர் மம்தா பானர்ஜி. பாஜகவுக்கும் பிரதமர் மோடிக்கும் சிம்ம சொப்பனாக இருக்கும் மம்தாவின் புகழ் அம்மாநிலத்தில் நாளுக்கு நாள் அதிகரித்து கொண்டே போகிறது.
இந்நிலையில் ஐரோப்பிய யூனியன் அமைப்பை சேர்ந்த போலந்து நாட்டில் வரும் மே மாதம் 10 முதல் 12 வரையிலான தேதிகளில் ஐரோப்பிய யூனியன் அமைப்பில் உள்ள நாடுகளின் பொருளாதார காங்கிரஸ் கருத்தரங்கம் நடைபெறுகிறது.
இந்த மாநாட்டில் கலந்துகொள்ள வருமாறு மம்தா பானர்ஜிக்கு போலந்து அரசு அழைப்பு விடுத்துள்ளது அந்த அழைப்பை ஏற்றுக்கொண்ட மேற்குவங்க முதல்வர் மம்தா, வரும் மே மாதம் 9-ம் தேதி அவர் போலந்து செல்கிறார். 3 நாள் நடைபெறும் கருத்தரங்கில் பங்கேற்கும் அவர் மே 13-ம் தேதி நாடு திரும்பவுள்ளதாக கூறப்படுகிறது.