Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

மோடி பெல்ஜியம் செல்வது உறுதி: மத்திய அரசு விளக்கம்

மோடி பெல்ஜியம் செல்வது உறுதி: மத்திய அரசு விளக்கம்

Advertiesment
நரேந்திர மோடி
பெல்ஜியத்தில் நடைபெற்ற குண்டு வெடிப்பு எதிரொலியாக அந்நாட்டிற்கு பிரதமர் மோடி செல்லும் பயணம் ரத்து செய்யப்படாது என மத்திய அரசு விளக்கம் கொடுத்துள்ளது.
 

 
பெல்ஜியம் தலைநகர் பிரஸ்ஸல்ஸ் நகரில் உள்ள விமான நிலையத்தில் நேற்று இரண்டு இடங்களில் பலம் வாய்ந்த குண்டு வெடிப்பு சம்பவம் நடைபெற்றது. இந்த கோரகுண்டு வெடிப்பில் சுமார் 34 பேர் பரிதாபமாக பலியானார்கள். இந்த சம்பவத்திற்கு இந்தியா உள்பட பல்வேறு நாடுகள் கடும் கண்டனம் தெரிவித்துள்ளன.
 
இந்த நிலையில், பெல்ஜியத்தில் நடைபெற்ற குண்டு வெடிப்பு எதிரொலியாக அந்நாட்டிற்கு வரும் 30 ஆம் தேதி, பிரதமர் மோடி செல்லும் பயணம் ரத்து செய்யப்பட உள்ளதாக தகவல் வெளியானது. ஆனால், இந்த பயணம் ரத்து செய்யப்படவில்லை என்றும், உறுதியாக மோடி அங்கு திட்டமிட்டபடி செல்வார் என்றும் மத்திய அரசு விளக்கம் கொடுத்துள்ளது. 

Share this Story:

Follow Webdunia tamil