ஜி7 மாநாட்டிற்கு வராத ட்ரம்புக்கு போன் செய்த பிரதமர் மோடி! - என்ன பேசினார்?

Prasanth K
புதன், 18 ஜூன் 2025 (09:48 IST)

ஜி7 உச்சிமாநாட்டில் அமெரிக்க அதிபர் டொனால்டு ட்ரம்ப் பங்கேற்காத நிலையில், இந்திய பிரதமர் மோடி அவருக்கு ஃபோன் செய்து பேசியதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.

 

ஜி7 நாடுகளின் உச்சிமாநாடு இந்த ஆண்டு கனடாவில் உள்ள கசன்ஸாகிஸில் நடைபெறும் நிலையில் இதில் கலந்து கொள்வதற்காக அமெரிக்கா, பிரான்ஸ், இங்கிலாந்து உள்ளிட்ட ஜி7 நாடுகளின் அதிபர்கள், பிரதமர்கள் கனடா வந்தனர். அமெரிக்க அதிபர் டொனால்டு ட்ரம்பும் இதற்காக கனடா வந்திருந்த நிலையில், அவரை இந்த மாநாட்டில் சிறப்பு விருந்தினராக கலந்து கொள்ளும் இந்திய பிரதமர் மோடி சந்தித்து பேசுவதாக திட்டமிடப்பட்டிருந்தது.

 

ஆனால் வேறு சில அவசர வேலைகளால் ட்ரம்ப் மாநாடு முழுவதும் பங்கேற்காமல் அவசரமாக அமெரிக்கா திரும்பினார். இந்நிலையில் பிரதமர் மோடி, ட்ரம்ப்க்கு ஃபோன் செய்து பேசியதாக வெளியுறவுச் செயலாளர் விக்ரம் மிஸ்ரி தெரிவித்துள்ளார்.

 

சுமார் 35 நிமிடங்கள் தொலைபேசியில் பேசிய நிலையில், பிரதமர் மோடி ஆபரேஷன் சிந்தூர் குறித்தும், இந்தியா மூன்றாம் தர மத்தியஸ்தங்களை ஏற்க விரும்புவதில்லை என்பது குறித்து அதிபர் ட்ரம்ப்பிடம் பேசியதாக செய்திகள் வெளியாகியுள்ளது.

 

மேலும் அமெரிக்கா தற்போது ஈரான் மற்றும் பயங்கரவாத அமைப்புகளுக்கு எதிராக செயலாற்றி வருவது குறித்தும், இந்தியாவின் பயங்கரவாத எதிர்ப்பு நடவடிக்கைகள் குறித்தும் இருவரும் பேசிக் கொண்டதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளது.

 

Edit by Prasanth.K

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

புதிதாக மகளிர் உரிமைத் தொகை கிடைக்காதவர்கள் என்ன செய்ய வேண்டும்? அமைச்சர் முக்கிய அறிவிப்பு..!

சென்னையில் இருந்து கிளம்பும் 100 இண்டிகோ விமானங்கள் ரத்து.. பல மடங்கு உயர்ந்த விமான கட்டணங்கள்..!

பாமக தலைவராக அன்புமணி தொடர முடியாது.. டெல்லி நீதிமன்றம் அதிரடி தீர்ப்பு..!

புதுச்சேரியில் தவெக பொதுக்கூட்டம்!.. காவல்துறை போட்ட கண்டிஷன்!...

விஜய் கட்சிக்கு இன்னொரு எம்.எல்.ஏ ரெடி!.. தவெகவில் இணையும் நடிகர்!....

அடுத்த கட்டுரையில்
Show comments