கனடாவில் பயணிகள் விமானம் ஒன்று தரையிறங்கும்போது பனியில் சறுக்கி தலைகீழாக கவிழ்ந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
அமெரிக்காவில் மினிபொலிஸில் உள்ள செயிண்ட் பால் சர்வதேச விமான நிலையத்தில் இருந்து 80 பயணிகளை ஏற்றிக் கொண்டு டெல்டா ஏர்லைன்ஸ் விமானம் ஒன்று கனடா நாட்டில் உள்ள டோரண்டோ விமான நிலையத்திற்கு சென்றது. விமான நிலையத்தை சுற்றி கடும் பனிப்பொழிவு இருந்து வரும் நிலையில் விமானம் தரையிறங்க முயன்றபோது ஓடு தளத்தில் பனி அதிகமாக இருந்ததால் சறுக்கியது.
இதில் தலைக்குப்புற கவிழ்ந்த விமானம் ஓடுதளத்தில் இழுத்து செல்லப்பட்டதால் தீப்பற்றியது. உடனடியாக ஓடி வந்து தீயணைப்பு வீரர்கள் தீயை அணைத்து பயணிகளையும் மீட்டுள்ளனர். இதில் 18 பயணிகளுக்கு காயங்கள் ஏற்பட்டுள்ள நிலையில் ஒரு குழந்தை உட்பட 3 பேர் பலத்த காயங்களுடன் சிகிச்சை பெற்று வருவதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. விபத்திற்குள்ளான விமானத்தில் இருந்து பயணிகள் மீட்கப்படும் வீடியோ சமூக வலைதளங்களில் வேகமாக பரவி வருகிறது.
Edit by Prasanth.K