மகாராஷ்டிரா மாநிலத்தைச் சேர்ந்த ஒரு கல்லூரி மாணவர், தேர்வுக்கு நேரமாகிவிட்டதை அடுத்து, பாராகிளைட் உதவியுடன் கல்லூரிக்குச் சென்ற சம்பவம் இணையத்தில் வைரல் ஆகி வருகிறது.
மகாராஷ்டிரா மாநிலம் சத்தாரா மாவட்டத்தைச் சேர்ந்த 19 வயது கல்லூரி மாணவர், பஞ்சகனி என்ற மலைப்பகுதிக்கு சென்று இருந்தார். அங்கிருந்து தனது கல்லூரிக்கு தேர்வு எழுத புறப்பட்ட நிலையில், சரியான நேரத்தில் புறப்பட முடியவில்லை.
கல்லூரிக்குள் குறிப்பிட்ட நேரத்திற்குள் செல்லாவிட்டால் தேர்வு எழுத முடியாது என்பதை அறிந்த அவர், என்ன செய்வது என்று யோசித்தார்.போக்குவரத்து நெரிசல் அதிகமாக இருந்ததால், வாகனத்தில் சென்றால் கண்டிப்பாக சரியான நேரத்தில் செல்ல முடியாது என்று நினைத்தார்.
உடனே, பாராகிளைட் சாகச விளையாட்டு குழுவினரை அணுகினார். அவர்கள், உரிய பாதுகாப்பு முன்னெச்சரிக்கையுடன், மாணவரை பாராகிளைடில் மலைப்பகுதியின் கீழ் பகுதியில் இறக்கிவிட்டனர். இதனை அடுத்து, அவர் நேரத்தில் கல்லூரிக்குச் சென்று தேர்வு எழுத முடிந்தார்.
இது தொடர்பான புகைப்படங்கள் மற்றும் வீடியோ இணையத்தில் வைரல் ஆகி வருகிறது.