Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

சூப்பர் மார்க்கெட் மீது விமானம் விழுந்து விபத்து!

Advertiesment
சூப்பர் மார்க்கெட் மீது விமானம் விழுந்து விபத்து!
, புதன், 30 மார்ச் 2022 (23:17 IST)
மெக்சிகோ நாட்டில்    சூப்பர் மார்க்கெட் ஒன்றின் மீது விமானம் விழுந்து விபத்துக்குள்ளான சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

மெக்சிகோ நாட்டின் குரேரோ என்ற மாகாணத்தில் உள்ள கடற்கரை நகரமான அகாபுல்கோவில் இருந்து இரட்டை என்ஜின் கொண்ட சிறிய ரக விமானம்  நேற்றுப் புறப்பட்டது. இதில்  4 விமானி உள்பட 4 பேர் பயணித்ததாக தெரிகிறது.

மெக்சிகோ மாகாணத்ததில்ன் டெமிக்ஸ்கோ நகருக்கு மேலே விமானம் பறந்தபோது, திடீரென்று கட்டுப்பாட்டை இழந்தது. விமானி விமானத்தை கீழே இறக்கப் போராடினார்.  ஆனால் அவரால் கட்டுப்படுத்த முடியாத நிலையில் விமானம் அங்குள்ள சூப்பர் மார்க்கெட் மீது விழுந்து   நொறுங்கியது.

இதில்,  விமானத்தில் வந்த 4 பேரீல் 3 பேர்  சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். ஒருவர் மட்டும் மீட்கப்பட்டு மருத்துவமனைக்கு அனுப்பிவைக்கப்பட்டுள்ளார்.  இதுகுறித்து விமான பாதுகாப்பு ஆணையம் விசாரித்து வருகிறது.

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

எஸ்.பி.வேலுமணியின் சொத்துகளை முடக்கி பிறப்பித்த உத்தரவு நீட்டிப்பு