Webdunia - Bharat's app for daily news and videos

Install App

தொப்பி அணிந்து வலம் வரும் புறாக்கள்! – அமெரிக்காவில் அதிசயம்

Webdunia
புதன், 11 டிசம்பர் 2019 (13:06 IST)
அமெரிக்காவில் உள்ள புறாக்கள் தலையில் தொப்பி அணிந்தவாறு பறந்து செல்வதும், சாலைகளில் செல்வது பார்ப்பவர்களை வியப்பில் ஆழ்த்தியுள்ளது.

அமெரிக்காவின் லாஸ் வேகாஸ் பகுதிக்கு புறாக்கள் சில பறந்து வந்துள்ளன. சாலைகளில் சென்று கொண்டிருந்த அந்த புறாக்கள் சிவப்பு நிற கௌபாய் தொப்பிகள் அணிந்திருந்தன. இது மக்களுக்கு ஆச்சர்யத்தை ஏற்படுத்தியுள்ளது. உடனடியாக அதை வீடியோ எடுத்து சமூக வலைதளங்களில் பகிர அது வைரலானது.

உடனடியாக அந்த பகுதிகளுக்கு வந்த பறவை ஆர்வலர்கள் சிலர் அந்த புறாக்களில் சிலவற்றை பிடித்து ஆராய்ந்தபோது யாரோ இந்த தொப்பியை புறாக்களுக்காகவே செய்து அணிவித்துள்ளது தெரிய வந்துள்ளது. பசை கொண்டு அழுத்தமாக ஒட்டப்பட்டிருப்பதால் இந்த புறாக்கள் துன்புறுத்தப்பட்டிருக்கலாம் என கருதப்படுகிறது.

எனினும் தலையில் தொப்பியுடன் தோன்றும் இந்த வித்தியாசமான புறாக்களை காண பொதுமக்கள் மற்றும் குழந்தைகள் ஆர்வம் காட்டி வருகின்றனர்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

தமிழர்களின் சித்த மருத்துவத்தை களவாட முயலும் மத்திய அரசு? - குட்டி ரேவதி கடும் கண்டனம்!

அடுத்த ஆண்டு தான் சனிப்பெயர்ச்சி.. திருநள்ளாறு கோவில் நிர்வாகம் முக்கிய அறிவிப்பு..!

வெனிசுலாவில் எண்ணெய் வாங்கினால் 25 சதவீதம் வரிவிதிப்பு! - உலக நாடுகளை மிரட்டும் ட்ரம்ப்!

சிங்கப்பூர்ல கழிவுநீரை சுத்திகரித்து குடிக்கிறாங்க.. நம்மாளுங்க முகம் சுழிக்கிறாங்க! - அமைச்சர் கே.என்.நேரு!

தமிழகத்தில் 40 சுங்கச்சாவடிகளில் கட்டணம் உயர்வு! - வாகன ஓட்டிகள் அதிர்ச்சி!

அடுத்த கட்டுரையில்
Show comments