Webdunia - Bharat's app for daily news and videos

Install App

ஒபாமாவை கெட்ட வார்த்தையில் திட்டும் அதிபர்!

Webdunia
சனி, 10 செப்டம்பர் 2016 (18:03 IST)
சமீபத்தில் லாவோஸ் நாட்டின் வியன்டியான் நகரில் 11-வது கிழக்கு ஆசிய மாநாடு நடைபெற்றது, அதில் அமெரிக்க அதிபர் பராக் ஒபாமா பிலிப்பைன்ஸ் நாட்டு அதிபர் ரோடிரிகோ டுட்டர்டேவை   சந்தித்துப் பேசுவதற்கு ஏற்பாடுகள் செய்யப்பட்டது.


 
 
இந்நிலையில், இந்த சந்திப்பின்போது, பிலிப்பைன்ஸ் நாட்டில் போதைப்பொருள் கடத்தல்காரர்கள் விவகாரத்தில் நடைபெற்றுவரும் மனித உரிமை மீறல்கள் குறித்து ரோடிரிகோ டுட்டர்டேவிடம் ஒபாமா கேள்வி எழுப்புவார் என்று வெள்ளை மாளிகை அதிகாரிகள் செய்திகள் வெளியிட்டனர். அதை பார்த்த பிலிப்பைன்ஸ் அதிபர் ரோடிரிகோ டுட்டர்டே ஒபாமாவை திட்டித் தீர்த்தார்.

இது தொடர்பாக அவர் கூறியதாவது, “ஒபாமா என்ன பெரிய கொம்பனா?, பெட்டை நாயின் மகனே.., (Son of a bitch) உன்னை (ஒபாமா) சபித்து விடுவேன், நான் ஒன்றும் அமெரிக்காவுக்கு தலையாட்டி பொம்மை இல்லை. நான் இறையாண்மை மிக்க ஒரு நாட்டின் அதிபர். என்நாட்டு மக்களை தவிர வேறு யாருக்கும் நான் பதில் அளிக்க வேண்டிய அவசியம் இல்லை.” என்றார்.
 
இதையடுத்து, பிலிப்பைன்ஸ் நாட்டின் அதிபர் ரோடிரிகோ டுட்டர்டேவை அமெரிக்க அதிபர் ஒபாமா சந்தித்துப் பேச ஏற்பாடு செய்யப்பட்டிருந்த நிகழ்ச்சி ரத்து செய்யப்பட்டது குறிப்பிடத்தக்கது. இந்நிலையில், அதிபர் ரோடிரிகோ, ”நான் ஓபாமாவை திட்டவில்லை, பத்திரிகையாளர்கள் தான் நான் சென்னதை தவறாக புரிந்துக்கொண்டு கண்டபடி எழுதிவிட்டார்கள்” என்று கூறியுள்ளார்.
எல்லாம் காட்டு

மேலும் படிக்க

தமிழகத்தில் பொங்கல் தினத்தில் மழை பெய்யும்: தமிழ்நாடு வெதர்மேன் தகவல்..!

சரணடையும் நக்ஸலைட்டுகளுக்கு லட்சக்கணக்கில் சன்மானம்! - சாதித்து காட்டிய சத்தீஸ்கர்!

கும்பமேளாவுக்கு இஸ்லாமியர்களும் வரலாம்.. ஆனால்..? - யோகி ஆதித்யநாத் விடுத்த எச்சரிக்கை!

3ம் வகுப்பு படிக்கும் சிறுமிக்கு மாரடைப்பு?? பள்ளியிலேயே பலியான சோகம்!

பாஜகவை நோக்கி சுட்டு விரலை நீட்டுவாரா விஜய்? நீட் விவகாரம் குறித்து திமுக கேள்வி..!

அடுத்த கட்டுரையில்
Show comments