சந்தேகத்திற்குரிய குற்றவாளிகளை தான் கொலை செய்ததாக பிலிப்பைன்ஸ் அதிபர் ரோட்ரிகோ டுடெர்டே ஒத்துக் கொண்டுள்ளது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
பிலிப்பைன்ஸ் நாட்டின் அதிபராக பதவி வகிக்கும் டுடெர்டே, போதை மருந்து கும்பல்களுக்கு எதிராக கடும் நடவடிக்கைகளை எடுத்து வருகிறார்.
அவர், மேயராக பதவி வகித்த போது போதை மருந்து கடத்தலுக்கு எதிராக டாவோ நகரில் பல அதிரடி நடவடிக்கைகளை எடுத்தார். டாவோ நகரில் இதற்கென தனி படை ஒன்று உருவாக்கப்பட்டு, போதை மருந்து கடத்தலில் ஈடுபட்டவர்கள் கொலை செய்யப்பட்டனர்.
இந்நிலையில், டாவோ நகரில் போதை மருந்து கடத்தியதாக கருதப்பட்ட பலரை, என் கைப்பட கொலை செய்தேன் என கூறியுள்ளார்.
கடந்த ஜூன் மாதம் டுடெர்டோ பிலிப்பைன்ஸ் அதிபராக பதவியேற்றதலிருந்து போதை மருந்து கடத்தலில் ஈடுபட்டதாக கூறி, இதுவரை பல்லாயிரக்கணக்கான பேர் கொலை செய்யப்பட்டது குறிப்பிடத்தக்கது.