இந்தியாவில் கடந்த 9 மாதங்களாக பெட்ரோல் மற்றும் டீசல் விலை உயராத நிலையில் பாகிஸ்தானில் இன்று ஒரே நாளில் ஒரு லிட்டர் பெட்ரோல் விலை 22 ரூபாய் உயர்ந்து 272 என விற்பனை ஆகி வருகிறது. அதேபோல் டீசர் விலை ரூபாய் 10 உயர்ந்து 197 என விற்பனை செய்யப்பட்டு வருகிறது.
பாகிஸ்தானில் பெட்ரோல் விலை ரூ.300ஐ நெருங்கி வருவதால் அந் நாட்டு மக்கள் கடும் அச்சமடைந்துள்ளனர். சில மாதங்களாக வரலாறு காணாத பொருளாதார சிக்கல் ஏற்பட்டுள்ள நிலையில் அந்நாட்டில் உள்ள அத்தியாவசிய பொருள்களின் விலை உச்சத்திற்கு சென்று உள்ளது என்பதும் அதனால் ஏழை எளிய மற்றும் நடுத்தர மக்கள் கடும் அவதிக்குள்ளாகி உள்ளார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.
மக்களின் உணவு தேவையை கூட பாகிஸ்தான் அரசால் பூர்த்தி செய்ய முடியாமல் திண்டாட்டத்தில் உள்ளது என்றும் சர்வதேச நிதியத்திடம் அதிக கடனை பாகிஸ்தான் கேட்டிருக்கிறது என்றும் கூறப்படுகிறது.