Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

எங்கள பிரிச்சிடாதீங்க.. அந்த மம்மி என் காதலி!? – அதிர்ச்சிக்குள்ளாக்கிய இளைஞர்!

Mummy
, வியாழன், 2 மார்ச் 2023 (13:38 IST)
800 ஆண்டுகள் பழமையான மம்மி ஒன்றை இளைஞர் ஒருவர் காதலித்து வந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

உலகம் முழுவதும் காதல் இளைஞர்களின் பொதுமொழியாக இருந்து வருகிறது. ஒரு ஆண் ஒரு பெண்ணை காதலிப்பது என்ற நிலை மாறி தற்போது பலர் தாங்கள் வைத்திருக்கும் ஏதோ ஒரு பொருளை தீவிரமாக காதலிப்பதும், அதையே மணந்து கொள்வதுமான விசித்திர சம்பவங்கள் கூட ஆங்காங்கே நடைபெறுகிறது. சமீபத்தில் ஒருவர் ரோபோவை திருமணம் செய்து கொண்ட சம்பவம் நடந்தது. ஆனால் இதையெல்லாம் விஞ்சும் விதமாக அமைந்துள்ளது பெருவை சேர்ந்த இளைஞர் ஒருவர் மம்மி மீது கொண்ட காதல்.

பெரு நாட்டை சேர்ந்த 26 வயது இளைஞர் ஜூலியோ சீசர் பெர்மேஜோ. உணவு டெலிவரி பாயாக பணிபுரிந்து வந்த இவர் சமீபத்தில் பூங்கா ஒன்றிற்கு இறந்து பாடம் செய்யப்பட்ட மம்மி ஒன்றினை எடுத்து சென்றுள்ளார். இதை கண்டு அங்கிருந்த மக்கள் பலரும் பயந்த நிலையில், போலீஸார் வந்து அந்த இளைஞரை பிடித்துள்ளனர். பெர்மேஜோவிடம் விசாரித்தபோது அந்த மம்மி தனது காதலி என அவர் கூறியது போலீஸாரையே அதிர்ச்சிக்கு உள்ளாக்கியுள்ளது.

30 ஆண்டுகளுக்கு முன்பு ஏதோ ஒரு இடத்தில் தோண்டும்போது அந்த மம்மியை கண்டெடுத்த பெர்மேஜோவின் தந்தை அதை வீட்டிற்கு கொண்டு வந்துள்ளார். அன்று முதல் அந்த மம்மியோடே பெர்மேஜோ வாழ்ந்து வந்துள்ளார். சாப்பிடும்போதும், தூங்கும்போதும் கூட அந்த மம்மியை அணைத்துக் கொண்டுதான் தூங்குவாராம்.

அந்த மம்மியை கைப்பற்றி சோதனைக்கு அனுப்பியதில் அது ஒரு ஆண் மம்மி என தெரிய வந்துள்ளது. சுமார் 800 ஆண்டுகள் பழமையான இந்த மம்மி பெருவியன் ஆண்டிஸ் பகுதியில் கிடைத்திருக்கலாம் என கருதப்படும் நிலையில் அந்த மம்மியை கலாச்சார ஆராய்ச்சி துறையிடம் அளித்துள்ளனர். அந்த மம்மியை காதலித்து வந்த பெர்மேஜோ அதற்கு ஜுவனிட்டா என பெயர் கூட வைத்திருந்துள்ளார். இளைஞரின் மம்மி காதல் பெருவை அதிர்ச்சிக்குள்ளாக்கியுள்ளது.

Edit by Prasanth.K

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

வெற்றியை கொண்டாடும் மனநிலையில் நான் இல்லை: ஈ.வி.கே.எஸ்.இளங்கோவன் பேட்டி