Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

போதை பொருள் கும்பலை பிடித்த கிறிஸ்துமஸ் தாத்தாக்கள்! – பெருவில் நூதன சம்பவம்!

Advertiesment
Peru
, செவ்வாய், 20 டிசம்பர் 2022 (13:27 IST)
பெரு நாட்டில் கிறிஸ்துமஸ் தாத்தா கெட்டப்பில் சென்று போதை பொருள் விற்ற கும்பலை போலீஸ் கைது செய்துள்ளனர்.

உலகம் முழுவதும் போதை பொருள் பயன்பாடு அதிகமுள்ள நாடுகளில் அதிகமான புழக்கத்தில் லத்தீன் அமெரிக்க நாடுகள் உள்ளன. குறிப்பாக லத்தீன் அமெரிக்க நாடான பெருவில் போதை வஸ்துகள் உற்பத்தி, விற்பனை அமோகமாக நடந்து வருகிறது. அவ்வபோது அந்நாட்டு போலீஸ் குற்றவாளிகள் சிலரை பிடித்தாலும் போதை பொருள் கடத்தலை முற்றிலும் தடுக்க முடியவில்லை.


போலீஸின் நடவடிக்கைகளுக்கு ஏற்ப போதை பொருள் கும்பலும் அப்டேட்டாகி விடுகின்றன. அவர்களை பிடிக்க போலீஸும் புதிய முறைகளை கையாள்வது வழக்கமாகியுள்ளது. பெருவில் போதை பொருள் விற்கப்படுவதாக சந்தேகிக்கப்பட்ட பகுதிக்கு பெரு போலீஸார் கிறிஸ்துமஸ் தாத்தா வேடத்தில் சென்றுள்ளனர்

அங்கு சாதுர்யமாக செயல்பட்டு போதை பொருள் விற்கும் ஆசாமிகளை அவர்கள் கைது செய்துள்ளனர். போதை கும்பலை பிடிக்க போலீஸார் கிறிஸ்துமஸ் தாத்தாவாக மாறிய சம்பவம் ஆச்சர்யத்தை ஏற்படுத்தியுள்ளது.

Edit By Prasanth.K

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

சேகர் ரெட்டி மகளுடன் நிச்சயிக்கப்பட்ட மணமகனுக்கு மாரடைப்பு: கவலைக்கிடம் என தகவல்