Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

செவ்வாய் கிரகத்தில் தரையிறங்கியது பெர்சவரன்ஸ்! – வெளியானது முதல் புகைப்படம்!

Advertiesment
செவ்வாய் கிரகத்தில் தரையிறங்கியது பெர்சவரன்ஸ்! – வெளியானது முதல் புகைப்படம்!
, வெள்ளி, 19 பிப்ரவரி 2021 (10:21 IST)
செவ்வாய் கிரகத்தை ஆராய நாசா அனுப்பிய பெர்சவரன்ஸ் விண்கலம் வெற்றிகரமாக செவ்வாயில் தரை இறங்கியது.

விண்வெளி ஆராய்ச்சியில் பல்வேறு முன்னேற்றங்களை கண்டுள்ள நாசா தொடர்ந்து செவ்வாய் கிரகத்தை ஆய்வு செய்து வருகிறது. முன்னதாக சில ரோவர்கள் அனுப்பப்பட்டு செவ்வாய் கிரகத்தை படங்கள் எடுத்த நிலையில் அங்குள்ள மண் மற்றும் பாறை மாதிரிகளை சேகரித்து வர நாசா திட்டமிட்டது.

இதற்காக உருவாக்கப்பட்ட பெர்சவரன்ஸ் விண்கலம் கடந்த ஆண்டு ஜூலை மாதம் விண்ணில் ஏவப்பட்டது கடந்த 8 மாத காலமாக விண்வெளி பயணம் மேற்கொண்ட பெர்சவரன்ஸ் இன்று செவ்வாயில் வெற்றிகரமாக தரையிறங்கியது. தரையிறங்கிய பெர்சவரன்ஸ் விண்கலம் எடுத்த முதல் புகைப்படம் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

இந்தியாவில் குறைந்து வரும் கொரோனா பாதிப்பு! – இன்றைய நிலவரம்!