Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

திருமணம் செய்யாமல் சேர்ந்து வாழவும், மது அருந்தவும் ஐக்கிய அமீரகத்தில் அனுமதி !

திருமணம் செய்யாமல் சேர்ந்து வாழவும், மது அருந்தவும்  ஐக்கிய  அமீரகத்தில் அனுமதி !
, திங்கள், 9 நவம்பர் 2020 (23:33 IST)
ஐக்கிய  அரபுஅமீரகத்தில் திருமணம் செய்யாமல் சேர்ந்து வாழவும் , மது அருந்தவும் அனுமதி வழங்கப்படவுள்ளதாக தகவல்கள் வெளியாகிறது.

ஐக்கிய அரபு அமீரகதில் உள்ள மக்கள் இஸ்லாமிய சட்டங்களைக் கடைபிடித்து வருகின்றனர்.

இந்நிலையில் அங்கு, மக்கள் திருமணம் செய்துகொள்ளாமல் ஒன்றாகச் சேர்ந்து வாழவும்,  மதுபானம் அருந்தவும் அனுமதி வழங்கபடவுள்ளது.

இருப்பினும் அங்கு கொலை, கொள்ளை போன்ற குற்றங்கள் தனிநபர் சட்டத்தின்படி குற்றம் என அறிவிக்கப்பட்டுள்ளது.

அங்குத் தனிநபர் சுதந்திரங்களில் புதிய தளர்வுகள் அளிகப்பட்டுள்ளதால் சுற்றுலா பயணிகளுக்கு மேற்கத்திய அனுபவம் கிடைக்கவும் வழி செய்யப்பட்டுள்ளதாகத் தகவல் வெளியாகிறது.

இப் புதிய தளர்கள் மூலம் மதுபானம் வாங்கவும்  வீட்டில் வைத்திருக்கவும் தடைவிதிக்கப்பட்ட முஸ்லிம்களும் இந்த சலுகைகளை அனுபவிக்கலாம்.

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

காதலுக்கு எதிர்ப்பு தெரிவித்த தாய்.... சிறுமி எடுத்த முடிவால் போலீஸார் அதிர்ச்சி