Webdunia - Bharat's app for daily news and videos

Install App

பாலித்தீவு: அகுங் மலையில் இருந்து வெளியேற மக்கள் மறுப்பு!!

Webdunia
வெள்ளி, 1 டிசம்பர் 2017 (15:31 IST)
இந்தோனேசியாவில் அகுங் மலையில் எரிமலையின் சீற்றம் அதிகரித்துள்ளதால் மலையோரங்களில் உள்ள மக்களை வெளியேற அரசு உத்தரவிட்டுள்ளது.

 
அகுங் மலையில் ஏற்பட்ட எரிமலை சீற்றத்தால் வெளியேறிய சாம்பல் மற்றும் கரும்புகையின் காரணமாக விமான சேவை முடங்கியது. இதனால் விமான பயணிகள் பலர் அவதிக்கு உள்ளாகினர். இன்று காலை முதல் எரிமலையின் சீற்றம் சற்றே குறைந்துள்ளதால் விமான சேவை தொடங்கியுள்ளது. எனினும் எரிமலையின் வேகம் எப்பொழுது வேண்டுமானாலும் அதிகரிக்கக் கூடும் என இந்தோனேசிய புவியியல் துறை எச்சரித்துள்ளது. எரிமலையின் சீற்றத்தை பொறுத்து எப்பொழுது வேண்டுமானாலும் விமான சேவை நிறுத்தப்பட வாய்ப்பிருப்பதாக விமான துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். இதனால் மக்களின் இயல்பு வாழ்க்கை பெரிதும் பாதிப்படைந்துள்ளது.
 
எரிமலையில் இருந்து தொடர்ந்து நீராவி வெளியாவதால் அகுங் மலையை சுற்றியுள்ள மக்களை பாதுகாப்பான பகுதிகளுக்கு செல்ல அரசு உத்தரவிட்டது. இதை ஏற்க மறுத்த அகுங் மலை வாழ் மக்கள் இது தங்களின் இடம், இந்த இடத்தை விட்டு வேறு எங்கேயும் செல்ல முடியாது எனக் கூறியுள்ளனர். 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

நெய்யில் கலப்படம் செய்தது ஆய்வில் உறுதி! 3 நிறுவனங்களுக்கு தடை விதித்த கேரளா!

லட்டு பிரசாத பாக்கெட்டுகளில் எலிக்குஞ்சுகள்! மீண்டுமொரு சர்ச்சை! - மும்பையில் அதிர்ச்சி!

வங்கக்கடலில் காற்றழுத்த தாழ்வுப்பகுதி: இன்று இடியுடன் கூடிய மழை: வானிலை அறிவிப்பு..!

6 பேர் கொண்ட கும்பல் பாலியல் பலாத்காரம்.. நர்ஸிங் மாணவி கூறிய தவறான தகவல்..!

டிஸ்சார்ஜ் ஆன துரை தயாநிதி அமெரிக்கா செல்ல ஏற்பாடு.. உயர் சிகிச்சை அளிக்க முடிவா?

அடுத்த கட்டுரையில்
Show comments