Webdunia - Bharat's app for daily news and videos

Install App

5ஜி டவரால் கொரோனா வைரஸ் பரவுமா? வதந்தியால் ஏற்பட்ட விபரீதம்

Webdunia
வியாழன், 9 ஏப்ரல் 2020 (08:21 IST)
5ஜி டவரால் கொரோனா வைரஸ் பரவுமா?
கொரோனா வைரஸ் மிக வேகமாக உலகம் முழுவதும் பரவி வரும் நிலையில் பிரிட்டன் நாட்டில் கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே வருகிறது. கொரோனா வைரஸ் தாக்கிய அந்நாட்டு பிரதமரே தீவிர சிகிச்சை பிரிவில் சிகிச்சை பெற்று வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது 
 
இந்த நிலையில் திடீரென இங்கிலாந்து நாட்டில் ஒரு வதந்தி பரவியது. அங்கு உள்ள 5ஜி டவரில் இருந்து வெளிவரும் கதிர்கள் நுரையீரலில் உள்ள ஆக்ஸிஜனை உறிஞ்சி எடுத்துவிடும் என்றும் இதனால் கொரோனா வைரஸ் மிக வேகமாக மக்களுக்கு பரவும் வாய்ப்பு இருப்பதாகவும் சமூகவலைதளத்தில் மர்ம நபர் யாரோ ஒருவர் ஒரு வதந்தியை கிளப்பி உள்ளார் 
 
இதனால் அதிர்ச்சி அடைந்த பிரிட்டன் மக்கள் கண்ணில் தெரியும் 5ஜி டவரை எல்லாம் அடித்து நொறுக்கி தீ வைத்தனர். இதனால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது. தொலைத்தொடர்பு நிறுவனங்கள் இதுகுறித்து விளக்கம் அளித்தபோது ’5ஜி டவரில் இருந்து வெளிவரும் கதிர்வீச்சினால் நுரையீரலில் உள்ள ஆக்சிஜனை உறிஞ்சும் என்பதற்கு எந்தவிதமான அறிவியல் ஆதாரமும் கிடையாது என்று மக்களை சமாதானப்படுத்தினார். இருப்பினும் 5ஜி டவரை தாக்கும் நடவடிக்கை தொடர்ந்து வந்ததால் போலீசார் இதுகுறித்து நடவடிக்கை எடுக்க தொடங்கியுள்ளனர். மேலும் இதுகுறித்து வதந்தியை பரப்பிய மர்ம நபர் யார் என்பது குறித்த விசாரணையை போலீசார் நடத்தி வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

மோடி, அமித்ஷாவை மனைவியுடன் சென்று சந்தித்த ஹேமந்த் சோரன்... என்ன காரணம்?

ஐதராபாத் தெருவில் திடீரென ஓடிய ரத்த ஆறு.. பொதுமக்கள் அதிர்ச்சி..!

இன்று 75வது அரசியலமைப்பு தினம்.. கமல்ஹாசன் அறிக்கை..!

வங்கதேசத்தில் இந்துமத தலைவர் கைது.. நாட்டை விட்டு வெளியேற தடை..!

கனமழை எதிரொலி: நாளை பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை குறித்த அறிவிப்பு..!

அடுத்த கட்டுரையில்
Show comments