அமெரிக்காவில் உடல் எடையைக் குறைக்க பலர் சிறுநீர் குடித்து வரும் சம்பவம் அதிர்ச்சியையும் ஆச்சரியத்தையும் ஏற்படுத்தியுள்ளது.
இன்றைய நவீன உலகத்தில் உடல் எடையைக் குறைக்க பலர் ஏராளமான மருந்துகளையும், சிகிச்சைகளையும், உடற் பயிற்சியையும் மேற்கொள்வதை நாம் அறிந்திருப்போம். ஆனால் உடல் எடையைக் குறைக்க அமெரிக்காவில் ஒரு விநோதமான நடைமுறை கடைபிடிக்கப்படுகிறது.
அமெரிக்காவில் உள்ள இடாகோ என்ற பகுதியைச் சேர்ந்த வானியல் ஆராய்ச்சியாளர் கிரிஸ்டோ டெப்ராக்கியோ உடல் எடையால் பெரிதும் அவதிப்பட்டு வந்தார். இணையத்தில் சிறுநீர் குடித்தால் உடல் எடை குறையும் என வந்திருந்த செய்தியை பார்த்த அவர், அதனை நம்பி, உடல் எடையைக் குறைக்க சிறுநீர் குடித்துள்ளார். இதனால் தன் உடலில் 13 கிலோ எடையை குறைத்ததாக அவர் கூறியுள்ளார்.
அத்தோடு மட்டுமில்லாமல் சிறுநீரை முகத்தில் மசாஜ் செய்கிறார். இதனால் தோல் சுருக்கம் குறைந்து இளமை திரும்புவதாகவும் தெரிவித்துள்ளார். இதனை அவர் இணையத்தில் பரவவிடவே இதனைப்பார்த்து பலரும் இந்த நடைமுறையை பின்பற்றி வருகின்றனர்.
இதுகுறித்து ஆராய்ச்சியாளர்கள் கூறுகையில், இதற்கான எந்த ஆதாரமும் இல்லை என தெரிவித்துள்ளனர்.