அமெரிக்காவின் அலாஸ்கா மாநிலத்தை நோக்கி பயணித்த விமானத்தில் விஷ பாம்பு ஒன்று இருந்தது பரபரப்பை ஏற்படுத்தியது.
பயணத்தின் போது விமானி, விமானத்தில் ஒரு பாம்பு உள்ளது. ஆனால் அது எங்கு உள்ளது என தெரியவில்லை என அறிவித்தார்.
அதை கேட்டு அதிர்ச்சி அடைந்த பயணிகள் அச்சத்துடன் பயணம் செய்தனர். பின்னர், ஒரு சிறுவனின் இருக்கைக்கு கீழே பாம்பு இருந்ததை பார்த்து விமான ஊழியர்களிடம் தெரிவிக்கப்பட்டது.
5 அடி நீளமுள்ள அந்த பாம்பை விமான ஊழியர்கள் பத்திரமாக பிடித்து ஒரு பைக்குள் அடைத்தனர். மேலும், அருகிலிருந்த ஒரு பெட்டியில் பாம்பு மூடி வைக்கப்பட்டது.
இதற்கு முன்னர் அந்த விமானத்தில் பயணம் செய்த பயணியிடம் இருந்து அந்த பாம்பு தப்பித்து விமானத்தில் புகுந்து கொண்டது என தெரியவந்ததுள்ளது.