Webdunia - Bharat's app for daily news and videos

Install App

பயணிகள் விமானம் - ராணுவ பயிற்சி ஹெலிகாப்டர் நேருக்கு நேர் மோதல்.. அமெரிக்காவில் அதிர்ச்சி..!

Mahendran
வியாழன், 30 ஜனவரி 2025 (11:50 IST)
அமெரிக்காவில் பயணிகள் விமானம் மற்றும் ராணுவ பயிற்சி  ஹெலிகாப்டர் நேருக்கு நேர் மோதி விபத்து பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

கன்சாஸ் என்ற பகுதியில் இருந்து அமெரிக்கன் ஏர்லைன்ஸ் இயக்கப்பட்டு வரும் நிலையில் இந்த ஏர்லைன்ஸ் விமானம் இந்திய நேரப்படி காலை 7.30  மணிக்கு வாஷிங்டன் விமான நிலையத்திற்கு வந்தது. அதில் 60 பயணிகள் மற்றும் நான்கு விமான ஊழியர்கள் பயணம் செய்த நிலையில் இந்த விமானம் விமான நிலையத்தில் தரையிறங்க முயற்சித்த போது திடீரென ராணுவ பயிற்சி ஹெலிகாப்டரில் மோதியது.

சுமார் 400 அடி உயரத்தில் 140 மைல் வேகத்தில் வந்து கொண்டிருந்த விமானம் இந்த விபத்து காரணமாக வெடித்து அருகில் உள்ள நதியில் விழுந்தது. இந்த விபத்து வெள்ளை மாளிகைக்கு வெறும் மூன்று மைல் தொலைவில் நடந்து உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

விபத்துக்குள்ளான ஹெலிகாப்டரில் மூன்று பேர் இருந்ததாக கூறப்படும் நிலையில் 3 பேர்களை நிலை என்ன என்பது குறித்து இதுவரை எந்த தகவலும் வெளியாகவில்லை. பயணிகள் விமானத்தை ஓட்டிய விமானி, கட்டுப்பாட்டு அறையில் அனுமதி பெற்ற பின்னர் தான் தரை இறக்கியதாகவும் ஆனால் திடீரென தரையிறங்குவதற்கு 30 நொடிகளுக்கு முன்பு அங்கு  ஹெலிகாப்டர் குறுக்கே வந்ததால் தான் இந்த விபத்து ஏற்பட்டதாகவும் முதல் கட்ட விசாரணையில் தெரிய வந்துள்ளது.

இந்த விபத்து காரணமாக ரீகன் விமான நிலையத்தில் உள்ள அனைத்து விமான சேவைகளும் நிறுத்தப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

Edited by Mahendran

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

உணவுப் பொருட்களில் பூச்சிக்கொல்லி இருப்பதாக பொய் தகவல்! - மயில் மார்க் நிறுவனத்தினர் போலீஸில் புகார்!

எனக்கு அரசியல் செய்ய நேரமில்லை.. வதந்திக்கு முற்றுப்புள்ளி வைத்த ஸ்ரீதர் வேம்பு..!

வகுப்பறையில் பேராசிரியை - மாணவன் திருமணம்.. வேற லெவல் காரணம்..!

20 லட்சம் அரசு ஊழியர்களை வீட்டுக்கு அனுப்பும் ட்ரம்ப்! அதிர்ச்சியில் அமெரிக்கா!

பாலியல் வன்கொடுமை, கொலை புகார்: தூக்கு தண்டனை விதிக்கப்பட்ட நபரை விடுதலை செய்த உச்சநீதிமன்றம்..!

அடுத்த கட்டுரையில்
Show comments