காசாவுக்குள் நுழைய பாலஸ்தீனியர்களுக்கு அனுமதி! 6 பிணை கைதிகள் விரைவில் விடுவிப்பு!

Prasanth Karthick
திங்கள், 27 ஜனவரி 2025 (16:21 IST)

இஸ்ரேல் - பாலஸ்தீன் போரில் போர்நிறுத்த ஒப்பந்தம் ஏற்பட்டுள்ள நிலையில் பாலஸ்தீனியர்கள் மீண்டும் காசா செல்ல இஸ்ரேல் அனுமதி அளித்துள்ளது.

இஸ்ரேல் - பாலஸ்தீன ஆதரவு ஹமாஸ் இடையே கடந்த இரண்டு ஆண்டுகளாக போர் நடந்து வந்த நிலையில் அமெரிக்கா உள்ளிட்ட நாடுகள் தலையீட்டின் பேரில் போர் நிறுத்த ஒப்பந்தம் அமலுக்கு வந்துள்ளது. அதன்படி இஸ்ரேலிய பணைய கைதிகளை ஹமாஸ் அமைப்பு விடுவித்து வரும் நிலையில், பாலஸ்தீன சிறைக் கைதிகளை இஸ்ரேல் விடுவித்து வருகிறது.

 

எனினும் இஸ்ரேலிய பணையக்கைதிகளில் முக்கியமானவரான அர்பெல் யாஹுட் என்பவரை ஹமாஸ் விடுதலை செய்யாமல் இருந்து வந்ததால் ஹமாஸ் போர் நிறுத்த ஒப்பந்தத்தை மீறுவதாக குற்றம் சாட்டிய இஸ்ரேல், வடக்கு காசாவிற்குள் பாலஸ்தீன் மக்கள் செல்ல தடை விதித்தது. அதை தொடர்ந்து மீண்டும் பேச்சுவார்த்தை நடத்தப்பட்ட நிலையில் அர்பெல் யாஹூட் பத்திரமாக இருப்பதாகவும், அவரை சனிக்கிழமை அன்று விடுவிப்பதாகவும் ஹமாஸ் கூறியுள்ளது. 

 

இதனால் காசாவிற்குள் பாலஸ்தீன மக்கள் நுழைய இஸ்ரேல் அனுமதித்துள்ளது. இதனால் போர் காரணமாக காசாவை விட்டு சென்ற ஏராளமான மக்கள் மீண்டும் காசா நோக்கி செல்லத் தொடங்கியுள்ளனர்.

 

Edit by Prasanth.K

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

சென்னை உள்பட 11 மாவட்டங்களில் கனமழை பெய்யும்: வானிலை எச்சரிக்கை..!

தமிழக அரசு ஊழியர்கள், ஆசிரியர்களுக்கு அகவிலைப்படி உயர்வு: முதல்வர் ஸ்டாலின் அறிவிப்பு..!

அயோத்தி ராமர் கோவிலுக்கு வரும் பிரதமர் மோடி.. பக்தர்களுக்கு தரிசன அனுமதி ரத்து..!

"கூட்டணி பெயரில் எல்லாவற்றையும் இழக்க முடியாது": கே.எஸ். அழகிரி பரபரப்பு பேச்சு

சென்னையில் வெறும் ஒரு ரூபாய்க்கு மெட்ரோ, பேருந்து டிக்கெட் ! யார் யார் பயன்படுத்தலாம்?

அடுத்த கட்டுரையில்
Show comments