பாகிஸ்தானில் வழக்கு ஒன்றில் நாய்க்கு மரண தண்டனை விதிக்கப்பட்ட சம்பவம் கேலிக்கு உள்ளாகியுள்ளது.
பாகிஸ்தான் நாட்டின் பஞ்சாப் மாகாணத்தில் நாய் ஒன்று பக்கத்து வீட்டு குழந்தையை கடித்துள்ளது. நாயிடம் கடிபட்ட குழந்தையின் பெற்றோர், இதுபற்றி போலீசில் புகார் செய்தனர்.
புகாரின் பேரில், போலீஸ் துணை கமிஷனர் ராஜா சலீம், நாய்க்கு மரண தண்டனை விதித்து உத்தரவிட்டார். மேலும், மனிதாபிமான அடிப்படையில் இந்த உத்தரவை பிறப்பித்ததாக கூறினார்.
ஏற்கனவே அந்த நாயும் அதன் எஜமானரும் இந்த வழக்கிர்காக ஒரு வார ஜெயில் தண்டனை அனுபவித்துள்ளனர். எனவே, மேலும் மரண தண்டனை விதிப்பது தவரானது என்று நாயின் எஜமானர் கோர்ட்டில் வழக்கு தொடர்ந்துள்ளார்.