Webdunia - Bharat's app for daily news and videos

Install App

பிரியங்கா சோப்ரா குறித்து ஐ.நாவுக்கு பாகிஸ்தான் எழுதிய கடிதம்..

Webdunia
வியாழன், 22 ஆகஸ்ட் 2019 (12:43 IST)
ஐ.நா.வின் நல்லெண்ண தூதராக இருக்கும் நடிகை பிரியங்கா சோப்ரா பதவி விலக வேண்டும் என ஐ.நா.வுக்கு பாகிஸ்தான் கடிதம் எழுதியுள்ளது.

உலகம் முழுவதும் பெண் குழந்தைகளின் கல்வி, நோய் எதிர்ப்பு சக்தி, தேவையான ஊட்டச்சத்துகள், எய்ட்ஸ் நோய் ஆகியவற்றை பற்றி விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் யூனிசெஃப் தொண்டாற்றி வருகிறது. இதன் உலகளாவிய நல்லெண்ணத் தூதராக பாலிவுட் நடிகை பிரியங்கா சோப்ரா கடந்த 2016 ஆம் ஆண்டு நியமிக்கப்பட்டார்.

இந்நிலையில் காஷ்மீரீன் சிறப்பு அந்தஸ்து ரத்து செய்யப்பட்டதை பிரியங்கா ஆதரித்தார் என்றும், மேலும் அவர் இந்தியா-பாகிஸ்தானின் இடையே பிரச்சனை எழும்போதெல்லாம் ஒரு தலைபட்சமாகவே செயல்படுகிறார் என்றும் குற்றம் சாட்டப்பட்டுள்ளது. ஆதலால் அவரை நல்லெண்ண தூதர் பதவியில் இருந்து நீக்குமாறு பாகிஸ்தான் மனித உரிமைகள் துறை அமைச்சர் ஷெரின் மசாரி, ஐ.நாவுக்கு கடிதம் எழுதியுள்ளார்.

புல்வாமா தாக்குதலின் போது இந்திய வீரர்களுக்கு ஆதரவாக பிரியங்கா சோப்ரா தனது டிவிட்டர் பக்கத்தில் “ஜெய் ஹிந்த்” என பகிர்ந்திருந்தது குறிப்பிடத்தக்கது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

ஏப்ரல் மாத ராசிபலன்கள், செய்ய வேண்டிய பரிகாரங்கள்! – மகரம்!

காஷ்மீர் மாநிலத்தின் முதல் வந்தே பாரத் ரயில்.. பிரதமர் திறந்து வைக்கும் தேதி அறிவிப்பு..!

நான் வங்கப்புலி; முடிந்தால் என்னோடு மோதிப் பாருங்கள் சவால் விட்ட மம்தா பானர்ஜி..!

தாய்லாந்துக்கு எந்த உதவி வேண்டுமானாலும் செய்ய தயார்: பிரதமர் மோடி அறிவிப்பு..!

பாங்காக் நிலநடுக்கம்: 30 மாடி கட்டிடம் இடிந்து தரைமட்டம்.. 43 பேரை காணவில்லை..!

அடுத்த கட்டுரையில்
Show comments