அசிங்கப்பட்ட பாக்.!! வளர்ச்சிக்கான மாநாட்டில் முதலீட்டாளர்களை குளிச்சியூட்ட பெல்லி டான்ஸ்??

திங்கள், 9 செப்டம்பர் 2019 (10:35 IST)
பாகிஸ்தானில் முதலீட்டாளர்கள் மாநாட்டில் பெல்லி டான்ஸ் நிகழ்ச்சிகளும் நடந்தது சமூக வலைத்தளங்களில் கண்டனங்களுக்கு உள்ளாகியுள்ளது. 
 
அண்டை நாடான பாகிஸ்தானின் பொருளாதாரம் கடும் சரிவை சந்தித்து வரும் நிலையில், அந்நாட்டின் பொருளாதாரத்தையும் வேலை வாய்ப்பையும் அதிகரிக்க முதலீட்டாளர்கள் மாநாட்டிற்கு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. 
 
அதன்படி சர்ஹாத் சேம்பர் ஆஃப் காமர்ஸ் மற்றும் இண்டஸ்ரி (எஸ்.சி.சி.ஐ.பி) கடந்த 4 ஆம் தேதி முதல் 8 ஆம் தேதி வரை அஜர்பைஜானில் உள்ள பாகுவில் இந்த மாநாட்டை நடந்தது. அந்த மாநாட்டுல் பெல்லி டான்ஸ் நிகழ்ச்சியும் அவ்வப்போது நடத்தப்பட்டது. 
இது தற்போது சர்ச்சைகளுக்குள்ளாகியுள்ளது. முதலீட்டாளர்கள் மாநாட்டில் பெல்லி டான்ஸ் எதற்கு? என்று சமூக வலைத்தளங்களில் சரமாரியான கேள்விகள் கேடகப்பட்டு வருகிறது. 
 
அதிலும் குறிப்பாக பாக். பெல்லி டான்ஸ் வீடியோவை பகிர்ந்த பத்திரிக்கையாளர் ஒருவர், பாகிஸ்தானுக்கான முதலீட்டாளர்கள் மாநாட்டில் பெல்லி நடன கலைஞர்களை வைத்து முதலீடுகளை ஈர்க்க முயற்சி என பதிவிட்டிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது. 

வெப்துனியாவைப் படிக்கவும்

அடுத்த கட்டுரையில் கோமியத்தால் புற்று நோயை குணப்படுத்த சுகாதாரத்துறை ஆராய்ச்சி