Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

பாகிஸ்தான் - 2 வது முறையாக பிரதமரானார் ஷெபாஸ் ஷெரீப்

shabash shereef

Sinoj

, திங்கள், 4 மார்ச் 2024 (17:45 IST)
பாகிஸ்தான் நாட்டின் 24 வது பிரதமராக ஷெபாஸ் ஷெரீஃப் இன்று பதவி ஏற்றுக்கொண்டார்.
 
பாகிஸ்தான் நாட்டில் கடந்த பிப்ரவரி 8 ஆம் தேதி பொதுத்தேர்தல் நடைபெற்றது. இதில், இம்ரான்கானின் பாகிஸ்தான் தெஹ்ரீக்- இ-இன்சபா,  நவாப் ஷெரீப்பின் பாகிஸ்தான் முஸ்லிம் லீக், பெனாசிர் பூட்டோவில் மகன் பிலாவல் பூட்டோவின்  பாகிஸ்தான் மக்கள் கட்சி ஆகிய 3 கட்சிகளிடையே பலத்த போட்டி  நிலவியது.
 
இதில், இம்ரான் கட்சி வேட்பாளர்கள் 93 இடங்களிலும்,   நவாஸ் ஷெரீப்பின் பாகிஸ்தான் முஸ்லீம் லீக் 75 இடங்களிலும்,   பிலாவல் பூட்டோவின் பாகிஸ்தான் மக்கள் கட்சி 54 இடங்களில் வெற்றி பெற்றுள்ளன.
 
இதுதவிர முட்டாஹிதா குவாமி இயக்கம் 17 தொகுதிகளிலும், மற்ற சில சிறிய கட்சிகாள் 17 தொகுதிகளில் வென்றன.
 
பாகிஸ்தானில் ஆட்சி அமைக்க 133 இடங்கள் தேவை என்ற நிலையில், எந்தக் கட்சிக்கும்  பெரும்பான்மை கிடைக்கைவில்லை. எனவே  நவாஸ் ஷெரீப்பின் பாகீஸ்தான் முஸ்லிம் லீக் மற்றும்  பிலாவல் பூட்டோ சர்தாரியின் பாகிஸ்தான் மக்கள் கட்சியும் இணைந்து பேச்சுவார்தைக்குப் பின் ஆட்சி கூட்டணி அரசமைக்க ஒப்புக்கொண்டன.
 
அதன்படி, முன்னாள் பிரதமர் ஷெபாஸ் ஷெரீப் புதிய பிரதமராகவும், முன்னாள் அதிபர் ஆசிப் அலி சர்தாரி நாட்டின் புதிய அதிபராகவும் வேட்பாளர்காளாக நிறுத்தப்பட்டனர்.
 
இந்த நிலையில்,  பாகிஸ்தான் நாட்டின் புதிய பிரதமராக 2 வது முறையாக ஷெபாஸ் ஷெரீப் பதவி ஏற்றுக்கொண்டார்.
 
இம்ரான் கட்சியை சேர்ந்த வேட்பாளர் உமர் அயூப் கான் வேட்பு மனுதாக்கல் செய்திருந்தார்.  பாகிஸ்தான் நாடாளுமன்ற நேற்று நடைபெற்ற வாக்கெடுப்பில், உமர் யூப் கான் 91 வாக்குகளே பெற்றார். ஆனால் ஷெபாஸ் ஷெரீப் 201 வாக்குகள் பெற்று வெற்றி பெற்றார் என்பது குறிப்பிடத்தக்கது.
 

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

செருப்பு சின்னம் கொடுத்தால் கூட வெற்றிபெறுவேன்..! சீமான் பேட்டி...