பாகிஸ்தான் பிரதமர் வீட்டில் வளர்க்கப்பட்டு வந்த 3 எருமைகள் மற்றும் 5 குட்டிகளை பாகிஸ்தான் அரசு 22 லடசத்துக்கு ஏலத்தில் விற்றுள்ளது.
பாகிஸ்தானின் புதிய அதிபராக கிரிக்கெட் வீரர் இம்ரான் கான் பதியேற்றதிலிருந்து பல அதிரடியான முடிவுகளை எடுத்துள்ளார். தனக்காக ஒதுக்கப்பட்ட அதிபர் மாளிகையை வேண்டாம் எனக்கூறிவிட்டு தனியாக ஒரு அபார்ட்மென்ட்டில் வசித்து வருகிறார்.
பாதுகாப்பு குறித்த விவகாரங்களிலும் இதே மாதிரியான துணிச்சலான முடிவுகளை தொடர்ந்து எடுத்து வருகிறார். தனக்காக ஒதுக்கப்பட்ட குண்டுதுளைக்காத கார்கள் மற்றும் ஹெலிகாப்டர்களை வேண்டாம் என் ஒதுக்கியதோடு அவற்றை விற்று 200 மில்லியன் ரூபாய்க்கு அரசின் கஜானாவில் செலுத்தியுள்ளார். இதுபோன்ற பல சிக்கன நடவடிக்கைகளை தொடர்ந்து அதிரடியாக நிறைவேற்றி வருகிறார்.
தற்போது மற்றுமொரு அதிரடி நடவடிக்கையாக பிரதமர் இல்லத்தில் பிரதமரின் உணவு தேவைக்காக முன்னாள் பிரதமர் நவாப் ஷெரிஃபால் 3 எருமைகள் மற்றும் 5 குட்டிகள் வளர்க்கப்பட்டு வந்தனர். அவற்றைப் பராமரிக்க 8 பொறுப்பாளர்கள் நியமிக்கப்பட்டிருந்தனர். அவற்றுக்கான பராமரிப்பு செலவுகளை மனதில் கொண்டு எருமைகளை ஏலத்தில் விட இம்ரான் கான் அறிவுறுத்தினார். ஏலம் ஆரம்பித்த 2 மணிநேரத்தில் எருமைகள் 22 லட்சம் ரூபாய்க்கு விற்கப்பட்டது.
எருமைகளை முன்னாள் பிரதமர் ஷெர்ஃபின் ஆதரவாளர்களே அந்த எருமைகளை ஏலத்தில் எடுத்துள்ளதாக செய்திகள் வெளியாயின. ஊழல் வழக்கில் தண்டிக்கப்பட்டு சிறைக்கு அனுப்ப்பட்ட ஷெரிஃப் தற்போது ஜாமீனில் வெளியில் வந்திருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.