Webdunia - Bharat's app for daily news and videos

Install App

காஷ்மீருக்காக அணுகுண்டு போரா? மிரட்டும் இம்ரான்கான்!

Webdunia
திங்கள், 26 ஆகஸ்ட் 2019 (20:09 IST)
காஷ்மீர் பிரச்சனையை சர்வதேச பிரச்சனையாக்க முயன்று தோல்வி அடைந்த பாகிஸ்தான் தற்போது காஷ்மீருக்காக எதையும் செய்ய தயார் என்றும் இரு நாடுகளும் அணுகுண்டுகள் வைத்திருப்பதால் இரு நாடுகளுக்கு இடையே போர் வந்தால் உலகம் முழுவதும் பாதிப்பு ஏற்படும் என்றும் பாகிஸ்தான் பிரதமர் இம்ரான்கான் மறைமுக மிரட்டல் விடுத்துள்ளார்
 
இன்று பிரான்ஸ் நாட்டில் நடைபெற்ற ஜி7 மாநாட்டில் இந்தியாவுக்கும் பாகிஸ்தானுக்கும் இடையிலான அனைத்து பிரச்சினைகளும் இருதரப்பு ரீதியிலானது என்றும் காஷ்மீர் விஷயத்தில் அமெரிக்கா  தலையிடாது என்றும் அமெரிக்க அதிபர் டிரம்ப் உறுதிபட தெரிவித்துவிட்டார். இதனால் பாகிஸ்தான் காஷ்மீர் விவகாரத்தில் தனித்துவிடப்பட்டதாக கருதப்படுகிறது
 
இந்த நிலையில் உள்நாட்டில் ஏற்பட்டுள்ள கடும் அதிருப்தியை சமாளிக்கும் வகையில் அணுகுண்டு விவகாரத்தை இம்ரான்கான் கையில் எடுத்துள்ளார். இன்று பாகிஸ்தான் பிரதமர் இம்ரான்கான் மக்களுக்காக ஆற்றிய உரையில், 'காஷ்மீர் மக்களுக்கு உதவ என்ன வேண்டுமானாலும் செய்வோம் என்றும், இந்திய அரசின் பிடிவாதம் போரை நோக்கி இட்டுச் செல்ல கூடும் என்றும் இரு நாடுகளிலும் அணு ஆயுதங்கள் இருப்பதால் போர் சூழ்நிலை ஏற்பட்டால் உலகம் முழுவதும் பாதிப்பு ஏற்படும் என்றும் எனவே உலக நாடுகள் காஷ்மீர் விவகாரத்தில் தலையிட வேண்டியது அவசியம் என்றும் பேசினார்.
 
இம்ரான்கான் இவ்வாறு பேசினாலும் முஸ்லீம் நாடுகள் உள்பட எந்த ஒரு நாடும் காஷ்மீர் பிரச்சனையில் பாகிஸ்தானுக்கு ஆதரவான கருத்தை தெரிவிக்கவில்லை என்பதும் சீனாவும் தற்போது இந்த விஷயத்தில் அமைதி காத்து வருகிறது என்பதும் குறிப்பிடத்தக்கது

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

ஆதவ் அர்ஜூனாவிடம் ஏதோ ஒரு செயல்திட்டம் இருக்கிறது: திருமாவளவன் பேட்டி

ஆவின் பால் விலை உயர்வு.. சில்லறை இல்லைன்னு ஒரு சில்லறை காரணம்??! - பாமக அன்புமணி ராமதாஸ்

திமுகவுக்கு கண்டனம்.. மத்திய அரசுக்கு வலியுறுத்தல்! - அதிமுக நிறைவேற்றிய 16 தீர்மானங்கள்!

தேனிலவு முடித்து திரும்பிய தம்பதியர் விபத்தில் பலி.. ஐயப்ப பக்தர்கள் பஸ் மோதியதால் விபரீதம்..!

நாடாளுமன்றத்தில் நாளை ஒரே நாடு, ஒரே தேர்தல் மசோதா தாக்கல்! எதிர்க்கட்சிகள் திட்டம் என்ன?

அடுத்த கட்டுரையில்
Show comments