முன்னாள் இந்திய பிரதமர்களான மன்மோகன் சிங் மற்றும் வாஜ்பாய் ஆகியோர்களை நாங்கள் பங்காளிகளாக பார்த்தோம் என்றும் ஆனால் தற்போதைய பிரதமர் மோடியை நாங்கள் பங்காளியாக பார்க்கவில்லை என்றும் பாகிஸ்தான் அமைச்சர் ஹினா ரப்பாணி தெரிவித்துள்ளார்.
உலக பொருளாதார மன்றத்தின் கூட்டத்தில் அவர் கலந்து கொண்டு பேசிய போது மன்மோகன் சிங் மற்றும் அடல் பிகாரி வாஜ்பாய் ஆகியவர்களை பாகிஸ்தான் பங்காளிகளாக கண்டது என்றும் ஆனால் மோடியை எங்களால் பங்காளியாக பார்க்க முடியவில்லை என்றும் அவர் தெரிவித்துள்ளார்
நான் வெளியுறவுத்துறை அமைச்சராக இந்தியா சென்ற போது சிறந்த ஒத்துழைப்பை வலியுறுத்த மிகவும் கடினமாக உழைத்தேன் என்றும் 2023 ஆம் ஆண்டு நிலவரத்துடன் ஒப்பிடும்போது நாங்கள் மிகச் சிறந்த நிலையில் இருந்தோம் என்றும் அவர் தெரிவித்துள்ளார்
பாகிஸ்தானில் எங்களுக்கு எந்த பிரச்சனையும் இல்லை என்று நான் கூறவில்லை ஆனால் சிறுபான்மையருக்கான புதிய சட்டங்கள் மற்றும் ஏற்கனவே உள்ள சட்டங்கள் அமல்படுத்துவதன் மூலம் பாதுகாக்கப்படுவதை உறுதிப்படுத்த எங்கள் அரசாங்கம் தொடர்ந்து பாடுபட்டு வருகிறது என்றும் பேசினார்.