சித்ரல் பகுதியில் இருந்து இஸ்லாமாபாத்திற்கு 47 பயணிகளுடன் சென்ற பாகிஸ்தான் உள்நாட்டு விமானம் விபத்தில் சிக்கி, பயணிகள் அனைவரும் உயிரிழந்தனர்.
பி.கே.661 ரக பாகிஸ்தான் உள்நாட்டு விமானம் சித்ரல் பகுதியில் இருந்து இஸ்லாமாபாத்திற்கு மதியம் 3.30 மணிக்கு புறப்பட்டது. செல்லும் வழியில் அப்போட்டாபாத் என்ற இடத்தில் விமானம் விபத்துக்குள்ளானது. இதில் பயணம் செய்த 47 பயணிகள் அனைவரும் உயிரிழந்துள்ளதாக பாகிஸ்தான் அரசு தெரிவித்துள்ளது.
தற்போது கிடைத்த தகவல்படி 21 சடலங்கள் மீட்கப்பட்டுள்ளது. பாகிஸ்தான் ராணுவ வீரர்கள் தொடர்ந்து மீட்புப் பணியில் ஈடுப்பட்டுள்ளனர். இச்சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
விமானம் விபத்துக்குள்ளாகும் முன்பு ரேடாரில் இருந்து மறைந்துள்ளது. பின்னர் விமானம் விபத்தில் சிக்கியது தெரியவந்துள்ளது. இதுகுறித்து அந்நாட்டு அரசு விசாரணை நடத்தி வருகிறது.