Webdunia - Bharat's app for daily news and videos

Install App

தேச துரோக வழக்கு: முஷாரப்பை கைது செய்ய நீதிமன்றம் உத்தரவு

Webdunia
சனி, 10 மார்ச் 2018 (10:58 IST)
பாகிஸ்தான் முன்னாள் அதிபர் பர்வேஷ் முஷாரப்பை தேசத்துரோக வழக்கில் கைது செய்ய பாகிஸ்தான் நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது.

 
 
74 வயதாகும் முஷாரப் பாகிஸ்தானில்  1999-ம் ஆண்டு முதல் 2008-ம் ஆண்டுவரை அதிபர் பதவி வகித்தார். அப்போது 2007-ம் ஆண்டில் அவர் பாகிஸ்தானில் நெருக்கடி நிலையை அமல்படுத்தினார். இதனால் 100-க்கும் மேற்பட்ட நீதிபதிகள் பதவி நீக்கம் செய்யப்பட்டனர்.
 
இது தொடர்பாக அவர் மீது 2014-ம் ஆண்டு தேசதுரோக வழக்கு போடப்பட்டது. மேலும், அவர் மீது பிரதமர் பெனாசிர் பூட்டோ கொலை வழக்கு தொடர்பாக வழக்கு ஒன்றும் உள்ளது. 
 
இந்நிலையில், கடந்த வியாழக்கிழமை பெஷாவர் ஐகோர்ட்டின் தலைமை நீதிபதி யாஹ்யா அப்ரிடி தலைமையிலான 3 நீதிபதிகள் அமர்வில் முஷாரப் மீதான தேசதுரோக வழக்கு விசாரணைக்கு வந்தது, அந்த விசாரணையில் அவரை கைது செய்ய நீதிபதிகள் உத்தரவு பிறப்பத்தனர். மேலும், அவரது சொத்துகளை பறிமுதல் செய்யவும் உத்தரவிட்டனர்.

தொடர்புடைய செய்திகள்

இந்தியாவுக்கு தொல்லை கொடுத்த பாகிஸ்தான் பிச்சை எடுக்கிறது: பிரதமர் மோடி விமர்சனம்..!

சென்னை - சவுதி அரேபியா இடையே புதிய விமான சேவை: ஏர் இந்தியா அறிவிப்பு..!

திடீரென அதிகரித்த கொரோனா கேஸ்கள்: மாஸ்க் கட்டாயம் என அறிவிப்பு.. எங்கு தெரியுமா?

பாகிஸ்தானை புகழ்பவர்களுக்கு இந்தியாவில் இடமில்லை: யோகி ஆதித்யநாத்

இந்திய இளைஞர்களை கோயிலுக்கு வரவழைக்க வேண்டும்: இஸ்ரோ தலைவர் சோம்நாத் வலியுறுத்தல்

அடுத்த கட்டுரையில்
Show comments