பாகிஸ்தான் மீது ஈரான் திடீரென தாக்குதல் நடத்தி உள்ளதை அடுத்து இரு நாடுகள் மோதல் ஏற்படுமோ என்ற பரபரப்பு ஏற்பட்ட நிலையில், ஈரானில் உள்ள தனது தூதரக அதிகாரியை பாகிஸ்தான் திரும்ப பெற்றுள்ளது.
பாகிஸ்தான் நாட்டில் உள்ள பலுசிஸ்தான் மாகாணத்தில் நேற்று ஈரான் நாட்டை சேர்ந்த புரட்சி படை திடீரென ஏவுகணை மற்றும் ட்ரோன்கள் மூலம் தாக்குதல் நடத்தியது.
இந்தத் திடீர் தாக்குதலில் பாகிஸ்தானை சேர்ந்த, இரண்டு குழந்தைகள் உயிர் இழந்ததாகவும் மூன்று பேர் காயம் அடைந்ததாகத் தகவல் வெளியானது.
இந்த தாக்குதலுக்கு பாகிஸ்தான் கண்டனத்தை தெரிவித்தது. அதில் பாகிஸ்தான் மீது தாக்குதல் நடத்தி நடத்துவதை ஏற்றுக்கொள்ள முடியாது; இது தொடர்ந்தால் ஈரான் கடும் விளைவுகளை சந்திக்க நேரிடும் என்று பாகிஸ்தான் வெளியுறவுத்துறை அமைச்சகம் எச்சரிக்கை விடுத்ததுடன், ஈரான் பொறுப்பாளரை வெளியுறவு அமைச்சகத்துக்கு வரவழைத்து கண்டனத்தையும் பதிவு செய்ததாகத் தகவல் வெளியானது.
இந்த நிலையில், ஈரானில் உள்ள தனது தூதரக அதிகாரியை திரும்ப பெறுவதாக பாகிஸ்தான் அறிவித்துள்ளது.
மேலும், ஈரான் தூதரக அதிகாரி பாகிஸ்தானுக்கு வரவேண்டாம் எனவும், ஈரானுடனான உயர்மட்ட அரசு முறை பயணங்கள் அனைத்தையும் ரத்து செய்வதாக பாகிஸ்தான் அறிவித்துள்ளது.