Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

30 நாட்களில் ஈரானில் இருக்கும் அமெரிக்க படைகள் திரும்ப வேண்டும் – எதிர்க்கட்சிகள் கொண்டுவந்த தீர்மானம்

30 நாட்களில் ஈரானில் இருக்கும் அமெரிக்க படைகள் திரும்ப வேண்டும் – எதிர்க்கட்சிகள் கொண்டுவந்த தீர்மானம்
, வெள்ளி, 10 ஜனவரி 2020 (07:50 IST)
அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்ப்புக்கு எதிராக ஜனநாயக கட்சி உறுப்பினர்கள் தீர்மானம் கொண்டுவந்து நிறைவேற்றியுள்ளனர்.

ஈரானின் ராணுவ தலைவர் சுலைமானியை அமெரிக்கா ட்ரோன் தாக்குதல் மூலம் கொலை செய்தது. அதற்கு பதிலடி கொடுக்கும் விதமாக அமெரிக்க ராணுவ தளங்களின் மேல் ஈரான் தாக்குதல் நடத்தியது. ஆனால் அதில் அமெரிக்க வீரர்கள் யாரும் கொல்லப்படவில்லை என அமெரிக்கா தெரிவித்துள்ளது.

இதனால் இரு நாடுகளுக்கு இடையே போர் மூளூம் சூழல் உருவாகியுள்ளது. அப்படி உருவானால் உலகளவில் பொருளாதாரம் பாதிக்கப்படும் என வல்லுனர்கள் அதிர்ச்சியளிக்கும் தகவலைக் கூறிவருகின்றனர். இந்நிலையில் போருக்கு ஆயத்தமாகும் அமெரிக்க அதிபர் ட்ரம்ப்புக்கு எதிராக ;ஹவுஸ்’ அவையில் பெரும்பான்மையாக உள்ள ஜனநாயக கட்சி எம்.பி.கள் தீர்மானம் ஒன்றை நிறைவேற்றியுள்ளனர்.

அதன் படி, அமெரிக்காவின் இரு அவைகளான செனட் மற்றும் ஹவுஸ் ஆகியவற்றின் ஒப்புதல் இல்லை என்றால் ஈரானுக்கு எதிரான ராணுவ பிரயோகத்தை முப்பது நாட்களுக்குள் டிரம்ப் நிறுத்த வேண்டும். ஈரானில் இருக்கும் படைகளை திரும்ப பெறவேண்டும் என அந்த் தீர்மானத்தில் சொல்லப்பட்டுள்ளது.

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

திராவிட அரசியல் காலத்தின் தேவையாக இருந்து தனிநபர்களின் தேவையாக மாறியுள்ளது – திமுகவை வம்பிழுக்கும் கமல் !