Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

உலகின் டாப் கோடீஸ்வரர்கள் பட்டியலில் இடம் பிடித்த ’ஒரே இந்தியர் ’

உலகின் டாப்  கோடீஸ்வரர்கள் பட்டியலில் இடம் பிடித்த ’ஒரே இந்தியர் ’
, புதன், 6 மார்ச் 2019 (18:38 IST)
ஆண்டுதோறும் பணக்காரர்களின் சொத்து மதிப்பு பலமடங்கு உயர்ந்து கொண்டே செல்கிறது.ஆனால் ஏழைகளின் பொருளாதார வாழ்க்கையோ  நாளுக்கு நாள் விலைவாசி உயர்வால் அதள பாதாளத்தில் சென்று கொண்டிருக்கிறது.
இந்நிலையில் 2019 ஆம் ஆண்டிற்கான உலகில் மிகப்பெரும் பணக்காரர்கள் பட்டியலை போர்ஃப்ஸ் இதழ் வெளியிட்டுள்ளது.
 
இதில் முதலிடத்தில் அமேசான் நிறுவனர் ஜெஃப்ப் பீஸோஸ் உள்ளார். அவரது சொத்து மதிப்பு 131 பில்லியம் ஆகும். அதாவது இந்திய மதிப்பில் 9 லட்சம் கோடி ருபாய் ஆகும். இதில் சரிபாதியை தான் விவாகரத்து செய்துள்ள தன் மனைவிக்கு ஜீவனாம்சம் தர வேண்டும் என்பது குறிப்பிடத்தக்கது. 
 
இரண்டாவதாக பிலேட்ஸ் உள்ளார். இவரது சொத்து மதிப்பு 6 லட்சம் கோடி ஆகும்.மூன்றாவது இடத்தில் வரன் பஃப்பெட் உள்ளார்.   எட்டாவது இடத்தில் பேஸ்புக் நிறுவனர் மார்க் ஜூகர்பெர்க் இருக்கிறார்.
 
இப்பட்டியலில் உலகில் முதல் 20 கோடிஸ்வரர்களில் 13 வது இடத்தில் உள்ளார் முகேஷ் அம்பானி. இவரது சொத்து மதிப்பு 2.8லட்சம் கோடி ரூபாய் ஆகும்.
 
உலகின் முதல் 20 கோடீஸ்வரர்கள் பட்டியலில் இந்தியர் ஒருவர் இடம் பிடிப்பது இதுவே முதன்முறை ஆகும்.இந்த சாதனைக்காக முகேஷ் அம்பானிக்கு பலரும் வாழ்த்துக்கள் கூறி வருகின்றனர்.


 

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

கல்லூரியில் படித்த போதே மாணவிகளை ஆபாசமாக படம் எடுத்து மிரட்டினேன்: திருநாவுக்கரசு பகீர் வாக்குமூலம்