Publish Date: Fri, 03 Dec 2021 (11:01 IST)
Updated Date: Fri, 03 Dec 2021 (11:36 IST)
தென் ஆப்ரிக்காவில் கண்டறியப்பட்ட ஒமிக்ரான் குறித்து உருவாகியுள்ள பல்வேறு கேள்விகளுக்கு விடை கிடைக்கவில்லை.
உலகம் முழுவதும் கொரோனா பாதிப்பு குறைய தொடங்கிய நிலையில் தற்போது தென் ஆப்பிரிக்காவில் இருந்து பரவத் தொடங்கிய ஒமிக்ரான் கொரோனா பாதிப்பு உலக நாடுகளை அச்சுறுத்த தொடங்கியுள்ளது. ஒமிக்ரான் பரவலை தடுக்க பல நாடுகளும் பல்வேறு முயற்சிகளை மேற்கொண்டு வருகின்றன.
இந்நிலையில் உலக சுகாதார அமைப்பு ஓமிக்ரான் வைரஸ் உலகம் முழுவதும் 23 நாடுகளில் பரவி உள்ளது. பயண தடைகள் மூலம் ஓமிக்ரான் தொற்று பரவலை தடுக்க முடியாது என முன்னர் குறிப்பிடத்தக்கது.
இதுவரை கண்டறியப்பட்ட வைரஸ்களில் மிகவும் வேகமாக பரவும் தன்மை கொண்டதாகவும் தடுப்பூசியை அதிகமாக எதிர்க்கும் தன்மை கொண்டதாகவும் அறிகுறிகளும் தீவிர தன்மை கொண்டதாகவும் இருக்கும் என தெரிவித்தனர்.
இதனிடையே தென் ஆப்ரிக்காவில் கண்டறியப்பட்ட ஒமிக்ரான் குறித்து உருவாகியுள்ள பல்வேறு கேள்விகளுக்கு விடை கிடைக்கவில்லை. இதனால் தொடர்ந்து ஆய்வுகள் மேற்கொள்ளப்பட வேண்டும் என்று உலக சுகாதார அமைப்பின் இயக்குநர் தெரிவித்துள்ளார்.