Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

கியூபாவிற்குச் செல்கிறார் அமெரிக்க அதிபர் பராக் ஒபாமா

Advertiesment
பராக் ஒபாமா
, வெள்ளி, 19 பிப்ரவரி 2016 (12:35 IST)
அரை நூற்றண்டுகளாக கடுமையான பகைமை நீடித்து வந்த நிலையில், அமெரிக்க அதிபர் பராக் ஒபாமா கியூபாவிற்கு பயணம் மேற்கொள்ள உள்ளார்.


 

 


அமெரிக்காவிற்கும் கியூபாவிற்கும் இடையே சுமார் அரை நூற்றாண்டு காலமாக பனிப்போரும், பகைமையும் நிலவி வந்தது.
 
இந்நிலையில், அமெரிக்க அதிகபர் பராக் ஒபாமா, கியூபாவிற்கு செல்ல உள்ளதாக கடந்த சில மாதங்களாக தகவல்கள் வெளியாகி வந்தது. 
 
இந்நிலையில், தான் கியூபாவிற்கு பயணம் மேற்கொள்வது குறித்த செய்தியை ஒபாமா தற்போது உறுதி செய்துள்ளார். 
 
இது குறித்து தனது டுவிட்டர் பக்கத்தில் ஒபாமா தெரிவித்துள்ளதாவது:-
 
இரு நாடுகளுடனான உறவை மேம்படுத்தும் விதமாக, அடுத்த மாதம் நான் கியூபா பயணம் மேற்கொள்கிறேன்.
 
இந்த முயற்சியால் கியூபா மக்களின் வாழ்க்கையை மேம்படுத்த முடியும். தற்போதும் கியூபா அரசாங்கத்துடன் எங்களுக்கு சில கருத்து முரண்பாடுகள் உள்ளன.
 
அதனை நான் நேரடியாகவே கூறுவேன். அமெரிக்கா எப்பொழுதும் மனித உரிமைக்காக உலகம் முழுவதும் குரல் கொடுக்கும். இவ்வாறு அவர் குறிப்பிட்டுள்ளார்.
 
சோஷலிசம் பொருளாதாரத்தை அடிப்படையாகக் கொண்டுள்ளது தென்னமெரிக்க நாடுகளுள் ஒன்றான கீயூபா. இதை பலவீனப்படுத்த அமெரிக்கா தொடர்ந்து முயற்சி செய்து வருகின்றது.
 
கியூபாவின் புரட்சியாளரும் அந்நாட்டின் முன்னாள் அதிபருமான பிடல் காஸ்ட்ரோவை கொலை செய்ய 500க்கும் மேற்பட்ட முறை அமெரிக்க முயன்றுள்ளது  என்பது குறிப்பிடத்தக்கது.

Share this Story:

Follow Webdunia tamil