அமெரிக்காவுக்கு எதிராக அணு ஆயுத ஏவுகணைகளை நிலைநிறுத்த ரஷ்யா தயாராக இருப்பதாக என அந்நாட்டு அதிபர் புதின் தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து அவர் கூறியாதவது:அமெரிக்க நாட்டுடனான அணு ஆயுத போட்டியை ரஷ்யா விரும்பவில்லை என்றார். இதே காலகட்டத்தில்தான் ஐரோப்பிய நாடுகளில் எல்லாம் ரஷ்யாவை குறி வைத்து அணு ஆயுத ஏவுகணைகள் நிறுத்தப்படுவதாக புகார் தெரிவித்தார்.
அமெரிக்காவுக்கு அருகாமையில் சர்வதேச கடற்பரப்பில் ரஷ்ய கப்பல்கள், நீர் முழ்கிகள் அணு ஆயுத ஏவுகணைகளுடன் நிறுத்தப்படும் என்று தெரிவித்தார்.
மேலும் அமெரிக்காவில் எந்த சாவாலையும் எதிர்கொள்ள ரஷ்யா முழு அளவில் தயார் என பதில் தெரிவித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.