இலங்கையின் இறுதிக்கட்டப் போரில் 40 ஆயிரம் பேர் கொல்லப்படவில்லை என்றும், 7000க்கும் அதிகமானோரே கொல்லப்பட்டிருக்கலாம் ஜனாதிபதி ஆணைக்குழுவின் தலைவர் மேக்ஸ்வெல் பரணகம தெரிவித்துள்ளார்.
இது குறித்து தனியார் செய்தி நிறுவனம் ஒன்றிடம் கருத்து தெரிவித்துள்ள அவர், ”2011ஆம் ஆண்டு ஐ.நா பொதுச் செயலர் பான் கீ மூன் நியமித்த மர்சுகி தருஸ்மன் தலைமையிலான நிபுணர் குழுவின் அறிக்கையில் கூறப்பட்டது போன்று, இலங்கை இறுதிக்கட்டப் போரில் 40 ஆயிரம் பேர் கொல்லப்படவில்லை.
பெரும்பாலும், 7000க்கும் அதிகமானோர்தான் கொல்லப்பட்டிருக்கலாம். போர்க்காலத்தில் நிகழ்ந்த மரணங்கள் தொடர்பாக எமது ஆணைக்குழு இதுவரை துல்லியமான எண்ணிக்கையைக் கண்டறியவில்லை. எனினும், ஐ.நா நிபணர் குழுவின் அறிக்கையில் கூறப்பட்டுள்ளது போன்று நிச்சயமாக 40 ஆயிரம் பேர் கொல்லப்படவில்லை.
அந்த அறிக்கையில் கூட, உயிரிழந்தோரின் எண்ணிக்கை தொடர்பாக உறுதியாக கூறப்படவில்லை. 40 ஆயிரம் பேர் கொல்லப்பட்டு இருக்கலாம் என்றுதான் கூறப்பட்டுள்ளது.
எனினும், எமது ஆணைக்குழு இதபற்றிய துல்லியமான எண்ணிக்கை பற்றிய முடிவு எதற்கும் வரவில்லை. ஆனால் 40 ஆயிரம் என்பது மிகையான கணிப்பு” என்றும் அவர் தெரிவித்துள்ளார்.