உலகம் முழுவதும் புத்தாண்டு கொண்டாடப்பட்டு வரும் நிலையில் புத்தாண்டு வாழ்த்து தெரிவித்த கொரிய அதிபரின் பேச்சு அந்நாட்டு மக்களையே ஆச்சர்யத்தில் ஆழ்த்தியுள்ளது.
வடகொரிய அதிபராக கிம் ஜாங் உன் பதவி வகித்து வரும் நிலையில் உலக நாடுகளின் எச்சரிக்கையையும் மீறி தொடர்ந்து அணு ஆயுதம் உள்ளிட்ட பயங்கர ஆயுதங்களை வடகொரியா சோதித்து வந்தது. இதனால் வடகொரியா மீது பொருளாதார தடையும் விதிக்கப்பட்டது.
இதோடு அதிபர் நிறுத்திக் கொள்ளவில்லை ஹாலிவுட் படங்களை பார்த்தால் அபராதம், விற்றால் சிறை தண்டனை என மனம்போன போக்கில் அதிகாரம் செய்து வந்ததும், அந்நாட்டில் ஏற்பட்ட உணவு பஞ்சத்தை கண்டுகொள்ளாமல் இருந்ததும் அந்நாட்டு மக்களிடையே பெரும் வெறுப்புணர்வை ஏற்படுத்தியிருந்தது.
இந்நிலையில் தற்போது புத்தாண்டு அன்று மக்களுக்கு வாழ்த்து கூறி பேசிய கிம் ஜாங் உன் “2022ம் ஆண்டில் பொதுமக்களுக்கு உணவுதான் முக்கியமே தவிர அணு ஆயுதங்கள் அல்ல. வடகொரிய மக்களின் வாழ்க்கை தரத்தை உயர்த்த அடுத்த 5 ஆண்டுகளுக்கு திட்டங்கள் வகுத்து செயல்படுத்தப்படும்” என பேசியுள்ளார். அணு ஆயுதங்களோடு சொந்தம் கொண்டாடி கொண்டிருந்த அதிபர் கிம் மக்கள் பிரச்சினைகள் குறித்து பேசியுள்ளது அந்நாட்டு மக்களுக்கே மெகா புத்தாண்டு ஆச்சர்யமாக அமைந்துள்ளது.