வடகொரியாவின் ஏவுகணை தவறி ஜப்பானின் பொருளாதார மண்டலத்தில் விழுந்து உள்ளதாக ஜப்பான் பிரதமர் உறுதி செய்துள்ளார்
கடந்த சில ஆண்டுகளாக வடகொரியா தன்னிடம் இருக்கும் அணு ஆயுதங்களை வைத்து எதிரி நாடுகளை அச்சுறுத்து வருகிறது. குறிப்பாக தென்கொரியா மற்றும் ஜப்பான் ஆகிய நாடுகளுக்கு நீண்ட காலமாக அச்சுறுத்தல் விடப்பட்டு வருவதாகவும் அமெரிக்காவுக்கும் எச்சரிக்கை விடுத்து வருவதாகவும் கூறப்படுகிறது.
இந்த நிலையில் வடகொரியா ஏவிய ஏவுகணை ஒன்று ஜப்பானின் சிறப்பு பொருளாதார மண்டலத்தில் விழுந்து உள்ளதாக ஜப்பான் பிரதமர் தெரிவித்துள்ளார். இதனால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. இந்த ஏவுகணை கிழக்கு கடற்கரையிலிருந்து மேற்கு ஒசிமா தீவு அருகே விழுந்ததாக அவர் கூறியுள்ளார்.
தென்கொரிய ராணுவமும் இந்த தகவலை உறுதி செய்துள்ளது. இந்த ஏவுகணை ஜப்பானை வம்புகளுக்கும் முயற்சி என்றும் ஜப்பான் திருப்பி தாக்கினால் வடகொரியா தாங்காது என்றும் ஜப்பான் ராணுவ அதிகாரிகள் கூறியதாக கூறப்படுகிறது. இந்த ஏவுகணையால் இரு நாட்டுக்கும் இடையே போர் மூளுமா என்பதை பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.