Webdunia - Bharat's app for daily news and videos

Install App

தடைகளை மீறி வருமானம்: வடகொரியாவில் நடப்பது என்ன?

Webdunia
சனி, 3 பிப்ரவரி 2018 (15:21 IST)
வடகொரியாவின் அணு ஆயுத சோதனைகள் உலக நாடுகளை அதிருப்தியை ஏற்படுத்தியுள்ள நிலையில், அமெரிக்காவின் கடும் கோபத்திற்கு உள்ளது. இதனால் பல பொருளாதார தடைகள் வடகொரியா மீது விதிக்கப்பட்டது.
 
இருப்பினும் ஏவுகணை மற்றும் அணு ஆயுத பரிசோதனைகளை வடகொரியா நடத்தி வருகிறது. இந்நிலையில், வடகொரியா தன் மீது விதிக்கப்பட்ட பொருளாதார தடையை மீறியுள்ளதாக ஐ.நா குற்றம் சாட்டியுள்ளது.
 
இது குறித்து ஐநா கூறியதாவது, வடகொரியா அதன் மீது விதிக்கப்பட்ட பொருளாதார தடைகளை மீறியுள்ளதாகவும், கடந்த வருடம் போலியான பாதைகள் மற்றும் தந்திரங்களை பயன்படுத்தி சுமார் 200 மில்லியன் டாலர்களை ஏற்றுமதியில் வருவாயாக ஈட்டியுள்ளது என குற்றம் சாட்டியுள்ளது. 
 
வடகொரியா மீது ஐநா 8 முறை பொருளாதார தடைகளை விதித்துள்ளது குறிப்பிடத்தக்கது. இருப்பினும் வடகொரியா தனது வருமானத்தை எவ்வாறு ஈடுசெய்து வருகிறது என்பதனை கண்காணிக்க ஐநா முடிவெடுத்துள்ளதாக தெரிகிறது. 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

நேற்று உயர்ந்த தங்கம் விலை இன்று மீண்டும் சரிவு.. சென்னையில் 1 சவரன் எவ்வளவு?

என்ன ஃபோன் பண்ணுனா இப்படி வருது? குழப்பத்தில் இருக்கீங்களா? - இதுதான் காரணமாம்?

ரஷ்யா - உக்ரைன் போரை நிறுத்த இந்தியாவால் முடியும்: வெள்ளை மாளிகை ஆலோசகர்..!

அமெரிக்கா வரி விதித்தால் இந்தியாவுக்கு துணையாக இருப்போம்: சீனா உறுதி

அவதார புருஷனாக விஜய் தன்னை நினைச்சுக்குறார்! - ஆர்.பி.உதயக்குமார் விமர்சனம்!

அடுத்த கட்டுரையில்
Show comments