வட கொரியா மலேசியாவுடனான தனது தூதரக உறவை துண்டிப்பதாக அறிக்கை வாயிலாக அறிவித்துள்ளது.
அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது பின்வருமாறு, மலேசியாவில் வசிக்கும் ஒரு வடகொரியருக்கு எதிராக அமெரிக்கா விதித்த பண மோசடி குற்றச்சாட்டுகள் அபத்தமானவை. இதனை ஏற்று அமெரிக்காவின் அழுத்தத்துக்கு அடிபணிந்து வடகொரியாவுக்கு எதிராக மிகப்பெரிய விரோத செயலை செய்துள்ளது மலேசிய அரசு.
எனவே, மலேசியாவுடனான தூதரக உறவுகளை முற்றிலுமாக துண்டிக்கிறோம். அமெரிக்கா இதற்கு உரிய விலை கொடுக்கும் என அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.