Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

ஒற்றைப் பெயர் இருந்தால் விசா கிடையாது: ஐக்கிய அரபு அமீரகம் அறிவிப்பு!

Advertiesment
visa
, வியாழன், 24 நவம்பர் 2022 (18:35 IST)
ஒற்றைப் பெயர் கொண்டவர்களுக்கு விசா கிடையாது என ஐக்கிய அரபு அமீரகம் நாடு அறிவித்துள்ளதாக வெளிவந்திருக்கும் செய்தி பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
 
பாஸ்போர்ட்டில் ஒற்றைப் பெயர் வைத்து அவர்களுக்கு ஐக்கிய அரபு அமீரகத்திற்கு இனி செல்ல முடியாது என அந்நாட்டு அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். ஒற்றைப்  பெயர் கொண்டவர்கள் சுற்றுலா மற்றும் பணிகளுக்காக விசாவுக்கு விண்ணப்பித்து அவர்களுக்கு விசா தரப்பட மாட்டாது என்றும் இந்த விதிமுறை வரும் திங்கட்கிழமை முதல் அமலுக்கு வருவதாகவும் அந்நாட்டு அரசுக்கு கூறியதாக தகவல்கள் வெளியாகின
 
பாஸ்போர்ட்டில் முதல் பெயர் மற்றும் இரண்டாவது பெயர் என இரண்டும் தெளிவாகக் குறிப்பிடப்பட்டிருக்க வேண்டும் என்றும் இரண்டு பெயர்கள் இருப்பவர்களுக்கு மட்டுமே விசா கொடுக்கப்படும் என்றும் ஐக்கிய அரபு அமீரகம் அறிவித்துள்ளது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது
 
மேலும் ஐக்கிய அரபு அமீரகத்தில் நிரந்தர விசா பெற்றவர்களும் விரைவில் இரட்டை பெயர்களை புதுப்பிக்க வேண்டும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
 
Edited by Mahendran

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

சூப்பர் மார்கெட் ஷாப்பிங்கில் செலவை குறைக்க 5 எளிமையான வழிகள்?