Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

இறுதிச்சடங்கிற்கு கூட பணம் இல்லை.. அமெரிக்காவில் இறந்த இந்திய மாணவருக்கு குவிந்த நிதி..!

Advertiesment
இறுதிச்சடங்கிற்கு கூட பணம் இல்லை.. அமெரிக்காவில் இறந்த இந்திய மாணவருக்கு குவிந்த நிதி..!

Mahendran

, வியாழன், 23 ஜனவரி 2025 (10:30 IST)
இந்திய மாணவர் ஒருவர் அமெரிக்காவில் மர்ம நபர்களால் சுட்டுக் கொல்லப்பட்ட நிலையில் அவரது இறுதி சடங்கிற்கு கூட அவரது பெற்றோர்கள் பணம் இல்லாமல் இருந்த நிலையில் அமெரிக்க வாழ் இந்தியர்கள் கொடுத்த நிதி குவிந்து வருவதாக தகவல் வெளியாகி உள்ளன.

தெலுங்கானா மாநிலம் ஹைதராபாத்தை சேர்ந்த ரவி தேஜா என்ற இளைஞர் கடந்த 2022 ஆம் ஆண்டு அமெரிக்காவில் மேல்படிப்புக்காக சென்ற நிலையில் அங்கு படிப்பை முடித்துவிட்டு அவர் வேலை தேடிக் கொண்டிருந்தார்.

அப்போது மர்ம நபர்கள் அவரை துப்பாக்கியால் சுட்டு கொலை செய்த நிலையில் குடும்பத்தினர் அதிர்ச்சி அடைந்தனர். அவரது கல்வி கடன், இறுதிச்சடத்திற்கான செலவு ஆகியவற்றுக்கு கூட பணம் இல்லை என்று மீடியா ஒன்றில் பேட்டி அளித்த நிலையில் அமெரிக்காவில் வாழும் இந்தியர்கள் அவருக்கு நிதியை அளித்து வருகின்றனர்.

இதுவரை இந்திய மதிப்பில் 83 லட்ச ரூபாய் நிதி கிடைத்துள்ளதாகவும் ஒரு கோடிக்கு மேல் நிதி திரட்டி அவரது குடும்பத்திற்கு கொடுக்க அமெரிக்க வாழ் இந்தியர்கள் திட்டமிட்டுள்ளதாகவும் கூறப்படுகிறது.

Edited by Mahendran

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

பாலியல் குற்றங்களுக்கு கடுமையான தண்டனை! உடனடி ஒப்புதல் கொடுத்த ஆளுநர்!